செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

இதை முதல்ல படிங்க:-செய்வீர்களா ஸ்டாலின்?

கதிராமங்கலம்:செய்வீர்களா செயல் தலைவரே!

“இந்நேரம் கருணாநிதி இருந்திருந்தால் கதையே வேறு”
“கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு என மூவரும் அறிவாலயம் வந்து கலைஞருக்கு ஒரு சால்வையை போட்டு திமுகவோடு ஐக்கியாமகி இருப்பார்கள்”
“எடப்பாடி அணி, தினகரன் அணி, என எந்த அணியாக இருந்தாலும் இந்நேரம் கலைஞரணியில் 30 எம்.எல்.ஏக்களாவது இணைந்திருப்பார்கள்” இது தமிழக மக்களிடம் மட்டுமல்ல சாதாரண திமுக தொண்டர்களிடமும் இக்குரலை எதிர்பார்க்க முடிகிறது.

 

இந்த குவிஸ்சுக்கு பதில் தெரிய:- குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!
அதில் உண்மையும் இருக்கலாம். ஆளும் கட்சிக்குள் ஏற்படும் முரண்பாடுகளை கொம்பு சீவி விட்டு அதை திமுகவுக்கு சாதமாக மாற்றி தமிழக அரசியலின் மையமாக மாற்றியிருப்பார். அப்படி ஒரு சூழல் இப்போது.
அதிமுகவுக்கு தலைமையில்லை. திமுகவின் இருந்து பிரிந்த இயக்கம் இப்போது சிந்தி சீரழிகிறது. பாஜக அதை கைப்பற்றி வைத்திருக்கிறது. இது கடந்த 40 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத நிலை. இதைத்தான் சிலர் வெற்றிடம் என்கிறார்கள்.
தமிழக அரசியல் சூழலில் வெற்றிடம் என்ற சொல்லை பயன்படுத்த ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.கடந்த செப்டம்பரில் துவங்கி தமிழக அரசியலில் திமுகவின் வகிபாகம் நீதிமன்றத்தை நம்பியும் ஆளுநரை நம்பியுமே நகர்ந்திருக்கிறது. அதனால்தான் செயல் தலைவரின் எந்த முயற்சியும் செயல்படாமல் இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறையாக்கியது காவல்துறை அனைவரும் ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தார்கள். அவரோ இரண்டு ஸ்டேட்டஸ்கள் ஒரு அறிக்கை அவளவுதான் அத்தோடு நிறுத்திக் கொண்டார்.
அதன் பிறகு நடந்த அனைத்து விவகாரங்களிலும் அடையாளப் போராட்டமும் அறிக்கையுமாக முடிந்து போனது. நீட் விவகாரத்தில் அனிதா தன் உயிர் ஈந்து தமிழகத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளார். அனைவரும் திமுகவைப் பார்க்கிறார்கள். ஒரு நாள் பந்த் அறிவிப்பார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். எதுவும் இல்லை. நான்கு தீர்மானங்கள் ஒரு பொதுக்கூட்டத்தோடு நீட்டுக்கு எதிரான தன் சேவையை முடித்துக் கொள்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின்.
திமுகவின் வழி அஹிம்சை வழி என்பதுதான் ஸ்டாலின் சொல்ல விரும்பும் செய்தி. தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்புகளுக்கு எதிர்வினையாற்றுவது இயக்கங்கள் பல நூறு குட்டி குட்டி இயக்கங்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள். அவர்களே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது என்பதை வலுவாக டெல்லி மையத்திற்கு எடுத்துறைக்கிறார்கள். இதில் திமுகவின் பங்குதான் என்ன?
அனிதாவுக்கு ஒரு மலர்வளையம், இரண்டு அறிக்கைகள். ஒரு பொதுக்கூட்டம். ஆனால் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகள் அத்தனை எளிதானதல்ல. அது மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தருணம். அந்த தருணமும் வாய்ப்பும் இன்னொரு முறை திமுகவுக்கு கிடைக்காது. கூடி வந்துள்ள இந்த வாய்ப்பை தவற விட்டு செயல் தலைவர் செயல்படாத தலைவராக இருக்கிறார்.

இப்போதைய தமிழக மக்களின் மன நிலையை திமுக பிரதிபலிக்க வில்லை என்பது பொது மக்களின் மன நிலை மட்டுமல்ல திமுக தொண்டர்களின் மன நிலையும் கூட,ஒரு எதிர்க்கட்சி தலைவராக என்ன செய்வது என்று திமுகவினர் கேட்கும் குரலுக்கு பதில் கலைஞர் கருவூலத்தில் தேடினால் கிடைக்கும்.அல்லது தேடுவது கடினமாக இருந்தால் தமிழகம் முழுக்க நடக்கும் போராட்டங்களையும் அதன் வடிவங்களையும் அதை நடத்தும் இயக்கங்களையும் பாருங்கள். இந்த இயக்கங்கள் மட்டும் இல்லை என்றால் அனிதாவை கயிற்றில் இருந்து இறக்கி அடுத்த சில மணி நேரத்தில் “குடும்பப் பிரச்சனையால் அனிதா தற்கொலை” என்று மூடிப் மண் போட்டு புதைத்து விட்டு போய் விடுவார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*