வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

பிறந்த நாளில் கைதான வளர்மதி

நேற்று திருமுருகன் இன்று வளர்மதி : எதிர்ப்பியங்களுக்கு போதாத காலம்?

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்த வழக்கில் ஜூலை 13-ஆம் தேதி கைதான கல்லூரி மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இயற்கையை காப்போம் என்ற பெயரில் துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு கொடுத்த வளர்மதி என்ற மாணவியையையும் அவரோடு சென்ற ஜெயந்தி என்ற பெண்ணையும் நக்சலைட்டுகள் என்ற குற்றச்சாட்டில் நான்கு நாட்களுக்கு முன்னர் கைது செய்த போலிசார் கடந்த 13-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை சேலம் சிறையில் அடைத்தனர். தங்களை விடுவிக்கக் கோரி இருவரும் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், இன்று அவர் மீது அதிரடியாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதையொட்டி வளர்மதி , ஜெயந்தி ஆகியோர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டனர்.
தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் அவர்கள் முறையிட்ட நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வளர்மதி மீதான குண்டர் சட்டம் சட்டவிரோதம் என்று அறிவித்தது நீதிமன்றம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*