பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக உறுப்பினர்களுக்கு முதலிடம்!

இதை முதல்ல வாசிங்க:-அவர்கள் ஏன் கௌரி லங்கேஷைக் கொலை செய்ய வேண்டும்?

மாணவர் போராட்டம்: பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி கமிஷனர்! video
மத்தியில் ஆளும் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களுமே பெண்கள் மீதான அதிக பட்ச வன்முறைகளை நிகழ்த்தி கிரிமினல் வழக்குகளை உடையவர்கள் என ஏ.டி.ஆர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாஜகவை அடுத்து சிவசேனா மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் அதற்கு அடுத்த இடங்களைப் பிடிக்கிறார்கள். இந்திய மாநிலங்களில் அதிக பட்ச கிரிமினல்களைக் கொண்டிருப்பது மகாரஷ்டிர மாநிலம். இம்மாநிலத்தில் அதிக பட்ச உறுப்பினர்கள் மீது பெண்கள் மீது நடத்திய வன்முறை வழக்குகள் உள்ளன.பாலியல் வன்முறை, கடத்தல் உள்ளிட்ட பெண்களூக்கெதிரான குற்ற வழக்குகள் 51 பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதியப்பட்டிருக்கின்றன என்கிறது கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை .
அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரட்டிக் ரிஃபார்ம்ஸ் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களை முன்வைக்கும் அரசு சாரா அமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் உள்ள உறுப்பினர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்தது.
அதில், அதிகபட்சமான பாஜக உறுப்பினர்கள் மீது 14 வழக்குகளும், சிவசேனா மீது 7 வழக்குகளும், திரிணாமூல் காங்கிரஸ் மீது 6 வழக்குகளும் உள்ளதாக தெரிவிக்கிறது.
பெண்களின் மீதான வன்முறை, தாக்குதல், அவதூறு, கடத்தல், கட்டாயத் திருமணம் அல்லது அதற்கு தூண்டுவது,பாலியல் வன்முறை,கணவராகவோ அல்லது கணவரின் உறவினராகவோ இருந்து பெண்களை கொடுமை செய்வது, பாலியல் தொழில் பொருட்டு குழந்தைகளை வாங்குவது, சொல், செயல், சைகை மூலம் பெண்களின் மரியாதைக்குத் தீங்கு விளைவிப்பது என்பவையே அந்த 51 பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் மீதான குற்றப்பதிவுகளாக ஏ.டி.ஆர் ஆய்வு கூறுகிறது.
ஏ.டி.ஆர் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம், நாடு முழுவதிலுமான 776 தொகுதிகளில் 774 பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வாக்குமூலப்பத்திரங்களும், 4,120 சட்டமன்ற தொகுதிகளில் 4,078 சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வாக்குமூலப் பத்திரங்களுமாக மொத்தம் 4,852 தேர்தல் வாக்குமூலப்பத்திரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வினை நடத்தியுள்ளது.

அதன்படி 1,581 (33%) பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் கிரிமினல் வழக்குகளை உடையவர்களாகவும் அவற்றுள் 51 பேர் பெண்களுகெதிரான குற்ற வழக்குகளையுடையவர்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இவை தவிர பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகள் உள்ள 334 நபர்கள், அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் 40 பேர் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா வேட்பாளர்கள், 294 பேர் சட்டமன்ற வேட்பாளர்கள் என வும் ஏ.டி.ஆர் ஆய்வு கூறுகிறது.முக்கிய கட்சிகளை ஒப்பிடுகையில், கடந்த 5 ஆண்டுகளில், பெண்களூக்கெதிரான குற்றப்பின்னனியுடைய 48 நபர்கள் பிஜேபி யினால் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.இரண்டாவது அதிகபட்சமாக பிஜேபி யின் 36 வேட்பாளர்களும் அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 27 வேட்பாளர்களும், லோக் சபா , ராஜ்ய சபா மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள்.

அதனுடன், கடந்த 5 ஆண்டுகளில் மஹாராஸ்ட்ரா (65), பீகார்(62) மற்றும் மேற்கு வங்கம் (52) (சுயேட்சைகள் உட்பட) வேட்பாளர்கள் தேர்தல் வாக்குமுலப் பத்திரங்களில், பெண்களூக்கெதிரான குற்ற வழக்குகள் உடையவராக அறியப்பட்டிருந்தும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருகிறார்கள் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

தொடர்புடைய பதிவுகள்

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*