மோடி அமித்ஷாவுக்கு பாடை கட்டி புதுச்சேரியில் ஊர்வலம்!

இதை முதல்ல வாசிங்க:-அவர்கள் ஏன் கௌரி லங்கேஷைக் கொலை செய்ய வேண்டும்?

மாணவர் போராட்டம்: பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி கமிஷனர்! video

‘நீட்’ என்னும் அநீதியான தேர்வு முறைக்கு எதிராக தமிழகம் புதுச்சேரியில் போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் புதுச்சேரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் இன்று பிரதமர் மோடி,பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பாடை கட்டி ஊர்வலம் நடத்தியதால் அங்கு பதட்டம் உருவாகியுள்ளது. இது ஆளும் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறதோ இல்லையோ பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்து இப்போது புதுச்சேரி கவர்னராக இருக்கும் கிரண்பேடிக்கு தர்மசங்கடங்களை உருவாக்கி உள்ளது.

நீட் நிரந்தர விலக்கு கோரி ஜெ சமாதியில் மாணவர்கள் தர்மயுத்தம்!

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?
நீட் தேர்வுக்கு எதிராக அரியலூர் அனிதாவின் உயிர்த்தியாகம் தமிழக மற்றும் புதுச்சேரி மாணவர்களை உசுப்பி விட அவர்கள் நீட் தேர்வு ரத்து கோரி போராடி வருகிறார்கள்.
போராட்டத்தின் மூன்றாவது நாளான ஒன்றும் புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகள் புதிய பேருந்து நிலையம் அருகே கூடி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை நிலையத்திலிருந்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா. நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரது உருவ பொம்மைகளை பாடையில் வைத்து தூக்கி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
போலிசார் அவர்களை மறித்ததால் இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட பாடைகளை தீயிட்டு கொளுத்தினார்கள். அப்போது மோடிக்கு எதிராகவும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரினார்கள்.50-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலையும் இதனால் பல மணி நேரம் போக்கு வரத்து தடை பட்டது.

தொடர்புடைய பதிவுகள்
உதவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*