எடப்பாடி ஓட்டும் வண்டிக்கு ஒரிஜினல் லைசென்ஸ் உண்டா?

என்னங்க சார் உங்க சட்டம்!

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

ஜெயலலிதா என்னும் ஒற்றை பிம்பம் கொடுத்த வெற்றி அதிமுகவினுடையது. அவருடைய துணிச்சலான முடிவுகளும் சர்வாதிகாரமும் சிறந்த நிர்வாகி என்ற பெயரை அவருக்கு பெற்றுக் கொடுக்க இரண்டாவது முறையாக தொடர்ந்து மக்கள் அவரை முதல்வராக்கினார்கள்.பிரமாண்டமான வெற்றிகளை அரசியலில் குவித்த ஜெயலலிதா அதிமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய நாடாளுமன்றம் பிரதிநிதித்துவம் உள்ள கட்சியாக்கினார்.
ஆனால் இன்று அந்தக் கட்சி மூன்று அணியாக செயல் படுகிறது. துவக்கத்தில் பன்னீர்செல்வம் அணி சசிகலா அணி என்று இரு அணியாக பிரிந்து நின்ற அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்த பின்னரும் கூட உள்ளுக்குள் தனித் தனி அணியாகவே செயல்படுகிறார்கள்.யார் காலை யார் வாரி விடுவது. யார் போனை யார் ஒட்டுக் கேட்பது. யாரை நம்பி யார் பேசுவது என்று அதிமுகவின் ஒவ்வொரு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுமே ஸ்லீப்பர் செல்களாக செயல்படுவதன் விளைவாக பெரும்பான்மை இழந்த மைனாரிட்டி அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையிழந்து விட்டோம். சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக் கொடுத்து பல நாட்கள் ஆகி விட்ட நிலையில் இந்த மைனாரிட்டி அரசை காப்பதில் ஆளுநரும் பாஜகவும் தீயாய் வேலை செய்கிறார்கள்.
பழனிசாமிக்கு இருப்பது வெறும் 109 சட்டமன்ற உறுப்பினர்கள்தான். பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் இன்னும் 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் இந்த அரசு கவிழ்ந்து விடும். எடப்பாடி பழனிசாமி ஓட்டிக் கொண்டிருக்கும் அதிமுக வண்டிக்கு ஒரிஜினல் லைசென்ஸ் கிடையாது. அது ஜெயலலிதா பெயரில் உள்ள லைசென்ஸை சசிகலா எடப்பாடிக்கு வழங்கினார். சசிகலா வழங்கிய லைசென்சை வைத்து வண்டியை ஓட்டுக் கொண்டிருக்கிறார்.ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாத இந்த வண்டியை ஆளுநரும் மத்தியில் ஆளும் பாஜகவும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

முதலில் இதை படிங்க:- பன்னீருக்காக பலி கொடுக்கப்பட்ட ஜெயக்குமார்

தினகரன் யுத்தம் தொடங்கியிருக்கிறாராம் தெரியுமா?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை கண்காணிக்க மத்திய உளவுத்துறை!

அதிமுகவை கைப்பற்றும் பாஜகவின் திட்டம் தோல்வியில் முடியும் எப்படி தெரியுமா?

சசிகலாவின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன தெரியுமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*