காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

டி.அருள் எழிலன்

தச்சடங்குகளின்றி ஆடல் பாடலோடு விடை பெற்ற கௌரி லிங்கேஷ்!

அவர்கள் ஏன் கௌரி லங்கேஷைக் கொலை செய்ய வேண்டும்?

இந்துத்துவத்துக்கு எதிராக செயலாற்றி வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை!

காந்தியை மர்ம மனிதன் சுட்டு விட்டதாகத்தான் முதலில் தகவல்கள் பரவியது.பின்னர்தான் சாவார்க்கருக்காக மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார் என்ற உண்மை தெரிய வந்தது.  9 பேர் மீது காந்தி கொலை வழக்கு நடந்த நிலையில் திகம்பர் பட்கே அரசுக்கு ஆதரவான அப்ரூவராக மட்டும் மாறாமல் போயிருந்தால் காந்தி கொலையில் எவரும் தண்டிக்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

தவிறவும் பொறுப்பு மிக்க தலைவராக நேரு இருந்தார். இன்று மோடி இருக்கிறார். பெங்களூருவில் கொல்லப்பட்ட கௌரி லிங்கேஷ் மரணம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர் நிதின்கட்காரி “கௌரி லிங்கேஷின் மரணத்தை பாஜகவோடு தொடர்புபடுத்தி பேசுவது துரதிருஷ்டவசமானது. பாஜகவுக்கோ எங்களோடு சேர்ந்தியங்கும் அமைப்புகளுக்கோ இக்கொலையில் தொடர்பு இல்லை” என்று கூறியிருக்கிறார்.

 

கர்நாடக டிஜிபி தலைமையில் 19 உயரதிகாரிகள் குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு கட்சியின் மூத்த தலைவர் இப்படி சொல்லும் போது அவர் விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறாரா என்றும் எண்ணத்தோன்றுகிறது.

வழக்கமாக பொய்யையும் புரட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் அடித்து விடும் அடிப்படைவாதிகள் கௌரிக்கு நக்சல்கள் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்திருந்தாக செய்திகளை பரப்புகிறார்கள்.

ஒரு ஊடகவியலாளராகவும், மொழிபெயர்ப்பாளாராகவும் தன் வாழ்நாள் முழுக்க மக்கள் நலனுக்காக பேசியும் எழுதியும் வந்த கௌரி லிங்கேஷுக்கு இடதுசாரிகள் குறிப்பாக நக்சல்கள் எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை.

காரணம் எப்போதும் அவர் சிந்தனை, எழுத்து மட்டத்தில் இடதுசாரிகளுடன் இணைந்து பயணித்தார்.தவிறவும் இக்கொலைகள் சங்கிலி தொடர் போல நடந்து வருகிறது. காவி பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறவர்களுக்கு விடுக்கப்படும் பகிரங்க அச்சுறுத்தலாகவே இக்கொலையை பார்க்க வேண்டியுள்ளது.

தபோல்கர்,கல்புர்கி,பன்சாரே கொலைகளின் தொடர்ச்சியாகவே கௌரி லிங்கேஷின் கொலையையும் காண முடியும். அப்படி காண்பதற்கான அரசியல் ஒற்றுமையும் கொலைகளின் தன்மையும் உணர்த்துவது அதுதான்.

 

நரேந்திர தபோல்கர்

2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் நாள் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை நிதானமாக சுட்டு விட்டுச் செல்கிறார்கள்.மக்கள் மீது அக்கறை கொண்ட மருத்துவரான நரேந்திர தபோல்கர் “அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி” என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி தொடர்ந்து இயக்கிவந்த தபோல்கர், அந்த இயக்கத்தின் மூலமாக போலி சாமியார்கள், பாபாக்கள், மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தினார்.

 

கோவிந்த் பன்சாரே

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் 82 வயதான பகுத்தறிவு வாதியும்இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க தலைவருமான கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 2015 பிப்ரவரி திங்கள் 16-ஆம் நாள் தன் மனைவியோடு நடந்து சென்று கொண்டிருந்த போது சுடப்பட்டார். மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் 20-ஆம் தேதி இறந்தார்.

 

கல்புர்கி

2015 ஆகஸ்ட் 30ஆம் தேதி கர்நாடக முற்போக்கு எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டார். ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தரான கல்புர்கியும் தீவிரமாக அடிப்படை வாதிகளுக்கு எதிராக பேசியும் எழுதியும் வந்தார்.

 

இப்போது இதே வரிசையில் நான்காவது நபராக கௌரி லிங்கேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலே நடந்த மூன்று கொலைகளுமே மர்ம நபர்களால் நிகழ்த்தப்பட்டவை. கௌரி லிங்கேஷ் கொலையும் மர்ம நபர்களால் நிகழ்த்தப்பட்டவை.

இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய இக்கொலைகள் தொடர்பாக சிபிஐ மற்றும் கர்நாடக சிஐடி அதிகாரிகள் மாதங்கள் கடந்து வருடக்கணக்காக விசாரித்தார்கள். அவர்களால் இந்த மூன்று கொலைகளிலும் ஒரு ஒற்றுமையை காண முடிந்தது.மூவரும் 7.65 எம்எம் ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த மூவரும் இந்து அடிப்படைவாத அமைப்புகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொது மக்களிடம் மட்டுமல்ல போலீசிடமே இருந்தது.

பின்னர் ஒரு வழியாக 2013-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தபோல்கர் கொலை வழக்கில் மகாராஷ்டிர, கர்நாடக எல்லையோரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த வீரேந்திர தாவ்டேவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரை காவலில் எடுத்து விசாரித்த போது சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தபோல்கர் மட்டுமில்லாமல், பன்சாரே, கல்புர்கி கொலை வழக்கிலும் தொடர்பிருப்பதோடு 2009-ஆம் ஆண்டு கோவாவில் நடந்த குண்டு வெடிப்பு ஒன்றிலும் தொடர்பிருப்பது தெரியவந்தது.அந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிதான் அல்கோரின் அவரது வழிகாட்டுதலின் படிதான் சனாதன் சன்ஸ்தா அமைப்பு செயல்படுகிறது.

இதை அடுத்து நடந்த ஆய்வுகளில் தபோல்கர், பன்சாரே கொலைகள் தொடர்பான பல தகவல்கள் கிடைத்ததாக செய்திகள் வெளியாகின. இந்துத்துவத்தை கேள்வி எழுப்புகிறவர்களைக் கொலை செய்ய 15000 பேரைக் கொண்ட பயிற்சி பெற்ற இராணுவத்தை அமைக்க சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டமிட்ட தாக தாவ்டே தன் வாக்குமூலத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகின.

தபோல்கரை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அதை பெற்றது எப்படி இந்தக் கொலைக்கு இந்துத்துவ அமைப்பினர் எப்படி பயன்பட்டார்கள் என்றெல்லாம் விரிவான செய்திகள் அப்போது வெளியாகின. இந்த தீவிரவாத கும்பல் தங்கள் எதிர்ப்பாளார்களைக் கொல்ல என்ன ஆயுதங்களை வேண்டுமென்றாலும் வழங்க தயாராக இருந்தது.

இந்த வழக்கில் வீரேந்திர தாவ்டேவைத் தவிற மற்றவர்கள் சிக்கவில்லை. விசாரணை அத்தோடு முடங்கிப் போனது.சனாதன் சஸ்தா அமைப்பின் தலைவர்களை விசாரணை அதிகாரிகளால்  நெருங்கக் கூட முடியவில்லை.

இந்த மூன்று கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்த கர்நாடக சிஐடி போலிசார் சிபிஐ அதிகாரிகளிடம் மேலதிகமாக சில ஆவணங்களையும் தகவல்களையும் கேட்டனர்.ஆனால் சிபிஐ தகவல்களை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது.

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொலைகளில் ஒற்றுமை இருக்கிறது என்கிறது கர்நாடக  சிஐடி. முதலில் வேகமான செயல்பட்ட சிபிஐ பின்னர் தயக்கம் காட்டியது. கர்நாடக சிஐடி போலீஸ் கேட்ட தகவல்களை கொடுக்க மறுத்தது.

வெறுத்துப் போன கர்நாடக சிஐடி “ கர்நாடக சிஐடி அதிகாரிகளுக்கு சிபிஐ உரிய முறையில் ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் குற்றவாளிகளை பிடிக்க முடியும் என சிஐடி போலீஸ் இயக்குநர் கிஷோர் சந்திரா கர்நாடக அரசுக்கு கடிதமும் எழுதினார்.

இந்த மூன்று கொலைகள் தொடர்பாகவும் மத்திய மாநில விசாரணை அமைப்புகளில் தொய்வும் தேக்கமும் காணப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால்  பிரதமர் மோடியின் நேரடியான பார்வையின் கீழ் இயங்கும் சிபிஐ மூவர் கொலை பற்றிய விசாரணையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.

 

தபோல்கர்,கல்புர்கி,பன்சாரே வரிசையில் இதோ இப்போது கௌரி லிங்கேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் வரிசை என்கிறோம் அவர்கள் ஒன்றுக் கொன்று தொடர்பில்லை என்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக உளவுத்துறை ஐஜிபி பிகே சிங் தலைமையில் 19 அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவானது விசாரிக்கும் என்று அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு.

அதே ஒற்றுமைகள் இந்தக் கொலையிலும் உள்ள நிலையில் ஏற்கனவே மூவரின் கொலையை விசாரித்து வரும் சிபிஐ புலனாய்வு அமைப்பின் உதவியை கௌரி லிங்கேஷ் கொலைக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவும் கேட்க வேண்டியிருக்கும்.

இந்த கொலைகளுக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். குற்றவாளிகளின் நோக்கம் இந்த கொலைகளில் தெளிவாக உள்ளது. நெருக்கமாக சுடப்படும் நபர்கள் தப்பித்து விடக் கூடாது என பயிற்சி மிக்க துப்பாக்கிச் சுடுகிறவர்கள் சுடுவது போன்று உள்ளது. குற்றவாளிகள் எளிதில் பிடிபடா வண்ணம்  உதிரிகளாக செயல்படுகிறார்கள்.

காந்தி கொலைக்கும் இப்போதைய கொலைகளுக்கும் கூட பண்பளவில் தொடர்பிருக்கலாம் ஆனால் அவர்கள் உத்திகளை மாற்றியிருக்கிறார்கள்.இந்திய புறச்சூழலும் அப்படித்தான் இருக்கிறது, சங்கிலி தொடராய் நடந்து வரும் இந்தக் கொலைகளுக்கு அடுத்த பலி யார்?

 

இந்துத்துவத்துக்கு எதிராக செயலாற்றி வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை!

உதவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*