நீட் எதிர்ப்பு:ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

 

நீட் வேண்டாம்: அரசு ஆசிரியை வேலையை தூக்கி எரிந்த பள்ளி ஆசிரியை!

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

நீட் தேர்வுக்கு எதிரான நெருப்பு தமிழகத்தில் எரியத் துவங்கியிருக்கிறது. தமிழகத்தில் கல்வித்திட்டத்தையே அழித்தொழிக்கும் நீட் எனும் அநீதியான தேர்வு முறைக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் அருகே உள்ள வைரபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, இள நிலை ஆசிரியர் சபரிமாலா ஜெயகாந்தன் தன் ஆசிரியர் பணியையே ராஜிநாமா செய்துள்ளார்.
ஊதிய உயர்வுக்காகவும் தங்களின் சொந்த கோரிக்கைகளுக்காகவும் போராடும் அரசு ஊழியர்களுக்கு மத்தியில் சபரிமாலா முன்னுதாரண மனுஷியாக உயர்ந்து நிற்கிறார்.
அவர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

வணக்கம்  நான் 2002 முதல் ஆசிரியராக தமிழக கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்கான என் வாழ்வை அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கி ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாதற்காகவே என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன்” என்று எழுதியுள்ள அக்கடிதத்தில்,
மேலும், “ மாணவி அனிதாவின் மரணத்தை கல்வி எழுச்சி கொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன். ஒரே கல்வி இல்லாமல் ஒரு தேர்வு எப்படி நியாயமாகும்? இந்த கோரிக்கையை வலியுறுத்தி 6-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றார்கள். சம்பளத்திற்காக ஆசிரியர்கள் போராடும் போது சமத்துவம் கொண்ட கல்விக்காக ஒரு ஆசிரியர் போராடக் கூடாது என்று சொல்வது வேதனை தருகிறது” என்று தனது ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார் சபரிமாலா ஜெயகாந்தன்.

தொடர்புடைய பதிவுகள்

நீட் நிரந்தர விலக்கு கோரி ஜெ சமாதியில் மாணவர்கள் தர்மயுத்தம்!

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?
உதவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*