நீட் வேண்டாம்: அரசு ஆசிரியை வேலையை தூக்கி எரிந்த பள்ளி ஆசிரியை!

நீட் எதிர்ப்பு:ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

நீட் தேர்வுக்கு எதிராக அனிதாவின் தற்கொலை தமிழகத்தை உசுப்பி விட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் நீட்தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் போது. நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஓலக்கூர், வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா ஜெயகாந்தன் தன் ஆசிரியர் பணியை தூக்கி எறிந்துள்ளார். என் மனச்சாட்சிப்படி முடிவெடுத்துள்ளேன். நமது குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்றுள்ளார்.
“எனக்கு போதுமான வசதியிருந்தும் என் குழந்தையை அரசுப்பள்ளியில்தான் படிக்க வைக்கிறேன். இந்த அரசுப்பள்ளியில் பயின்று சாதிக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபிப்போம். ஆனால் நாடு முழுக்க ஒரே பொதுக்கல்வி முறை இல்லாத போது மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்சி கல்வித்திட்டத்தின் அடிப்படையில் நீட் எனும் தேர்வு நடத்தப்படுவது அநீதியானது. மரணமடைந்த குழந்தை அனிதா சொல்வதைக் கேளுங்கள் :- “ எனக்காக இல்லை என்றாலும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ஏழைகள் பணம் செலவு பண்ணி படிக்க முடியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்காகவேனும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்” என்றார். அந்த கேள்விதான் என் மனச்சாட்சியை உலுக்கியது. நாடு முழுக்க அனைவருக்கும் பொதுவான சமமான கல்வி முறையை கொண்டு வந்து விட்டு எத்தனை கடினமான கேள்விகளையும் எந்த தேர்வை வேண்டுமென்றாலும் நடத்தி கேட்டாலும் அனிதா மட்டுமல்ல எங்கள் அத்தனை குழந்தைகளும் சிறப்பாக வெல்வார்கள். சிபிஎஸ்சியில் படிக்கும் குழந்தைகளால் மாநில பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என்பதால் அவர்களுக்கு சாதகமாக சிபிஎஸ்சி அடிப்படையில் நீட் நடத்துவது நமது தலைமுறையை அழித்து விடும்” என்றார் சபரிமாலா.

தொடர்புடைய பதிவுகள்

நீட் நிரந்தர விலக்கு கோரி ஜெ சமாதியில் மாணவர்கள் தர்மயுத்தம்!

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?
உதவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*