தமிழக ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ விஷால்?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘துப்பறிவாளன்’. சில வாரங்களுக்கு முன்பு இதன் டீஸர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற துப்பறியும் கதையான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’-இன் சாயலில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என விஷால் தெரிவித்துள்ளார். இதில் கனியன் பூங்குன்றன் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஷால்.

[இதையும் வாசிங்க: அரசியலுக்கு வருவாரா விஷால்?]

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், “மிஷ்கினினுடன் பணியாற்றியது ஓர் புதிய அனுபவம், என் பாவனைகளை அவர் மாற்றிவிட்டார். இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை, ஒரே ஒரு தீம் மியூசிக் மட்டும்தான். நம் தமிழ் சினிமா மாறி வருகிறது, பாடல்கள் இல்லாத படங்களையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார். இதில் பிரசன்னா, ஆண்ட்ரியா, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

[விஷால், நிவின் பாலி வழியில் சூர்யா: கோலிவுட்டில் பரபரப்பு]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*