நீட் அநீதி: நுங்கம்பாக்கத்தை ஸ்தம்பிக்கச் செய்த அரசுப் பள்ளி மாணவிகள்

நீட் அநீதியால் உயிர் நீத்த அரியலூர் மாணவி அனிதாவுக்காக ஆங்காங்கே கண்டனக் கூட்டங்கள் நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்றம் பொதுமக்களுக்கு இடையூறில்லாமல் போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்தது. ஆனால் தமிழக அரசாங்கம், போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு என வதந்தியை பரப்பியது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இன்று மகாலிங்கபுரத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் மற்றும் ஆசிரியைகள் சமாதானப்படுத்தினர். அதையும் மீறி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், மாணவிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கினர். அப்போது, ”வேண்டாம் வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம், ரத்து செய் ரத்து செய் நீட் தேர்வை ரத்து செய்” என்று முழக்கமிட்டபடி மாணவிகள் மறியல் செய்தனர். இதனிடையே, மூன்று மாணவிகளை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் கோபமடைந்த மாணவிகளை அப்புறப்படுத்த காவல்துறையினர் முற்பட்டனர், கடைசியாக ஆசிரியைகளை கொண்டு மாணவிகளை கலைந்து போகச் செய்தனர். பள்ளிக்கு சென்ற மாணவிகள் பள்ளி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவிகள் அறிவித்துள்ளதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஆசிரியைகள் மூலம் போராட்டத்தை கலைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

நீட் எதிர்ப்பு:ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*