ஆளுநருக்குக் கெடு: திமுக கூட்டணியில் தினகரன் ஸ்டாலின் சூசகம்!

அதிமுகவின் தினகரன் அணியினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என்று ஆளுநரிடம் தினகரன் அணியினர் கடிதம் கொடுத்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு மைனாரிட்டி அரசானது.
இந்நிலையில் திமுக கூட்டணியினர் இன்று இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் தலைமையில் ஆளுநரைச் சந்தித்தார்கள். சுமார் அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின்.

 

இந்த முக்கிய செய்திகளை அவசியம் வாசியுங்கள்

மொழிப்போர் தியாகிகள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்த தமிழிசை! (#வீடியோ_உள்ளே)

யல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

பாஜக: இது பொதுக்கூட்டமா? பொய்க்கூட்டமா? (#வீடியோ_உள்ளே)

இயக்குநர் ரஞ்சித்தின் பெரியார் எதிர்ப்பரசியல்: அ.மார்க்ஸ்
“அதிமுகவின் ஒரு பிரிவினரின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது அதிமுகவின் இன்னொரு பிரிவினரான தினகரன் அணியினர் நம்பிக்கை இழந்து விட்டதாக ஆளுநரிடம் மனுக் கொடுத்ததன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம். இது தொடர்பாக பிரதமருக்கு விரிவாக கடிதம் எழுதினோம். எங்கள் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்கள். ஆளுநரிடமும் இது தொடர்பாக மனுக்கொடுத்தோம்”
“சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் கூட்டிய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. தினகரன் அணியில் 22 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதில் ஒருவர் அணிமாறி எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்ற நிலையில் 21 பேர் உறுதியாக தினகரன் அணியில் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையிழந்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் எங்கள் எண்ணிக்கை அதாவது எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையிழந்து விட்டோம் என்று மீண்டும் மனுக்கொடுத்திருக்கிறார்கள்”என்ற ஸ்டாலின் மேலும்,

தமிழ் பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த மிஸ்ஸியம்மாவைத் தெரியுமா?
“தமிழக சட்டமன்றத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கு 89 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 1 உறுப்பினரும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களுமாக 98 உறுப்பினர்கள் இருகிறார்கள். தினகரன் அணி எம்.எல். ஏக்கள் 21 பேரைச் சேர்ந்தால் 119 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்றார். 114 பேர்தான் மொத்தமாக எடப்பாடி அரசை ஆதரிக்கிறார்கள். ஆனால் 119 உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்க்கிறார்கள்.ஆக இந்த அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றிருக்கிறோம். இந்த பிரச்சனைக்காக நங்கள் கவர்னரை சந்திப்பது இதுவே கடைசி வரை. இன்னும் ஒருவார காலத்தில் கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் நாடுவோம்.ஆக சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்டுவார் என நம்புகிறோம்”

ஆளுநர் சந்திப்புக்கு பிந்தைய இன்றை ஊடகச் சந்திப்பில் பேசிய ஸ்டாலின். எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை பட்டியலிடும் போது தினகரன் அணி எம்.எல்.ஏக்களையும் தங்கள் அணியோடு இணைந்த எண்ணிக்கையாகச் சொன்னார். இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*