பவானியம்மா :அந்த விளக்கு அணைந்து விட்டது!

கேரளத்தின் மூவாற்றுப்புழாவின் கரையோரத்தில் ஒரு வீட்டில் வைத்து 2006-ஆம் ஆண்டு பவானியம்மாவைச் சந்தித்தேன். அப்போது அவருக்கு வயது 62. குழந்தை பிறகு சில மாதங்களே ஆகியிருந்தது. உலகின் அதிக வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண் அவர்.

முதலில் இதை வாசிங்க:- நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!

நடராஜன் உடல் நிலை: பரோலில் வர விரும்பாத சசி…!பின்னணி தகவல்கள்!

 

மரணிப்பதற்கு முன்னால் நடிகை மனோரமாவை நீண்ட நேர்காணல் ஒன்றை செய்த போது பவானியம்மா நினைவில் வந்து போனார். பல பெண்கள் மனோரமாக்களாகவும் பவானியம்மாக்களாகவும் வாழ்ந்தும் மடிந்தும் ஜீவித்தும் இருக்கிறார்கள்.
பவானியம்மா ஒரு டீச்சர் திருமணம் செய்து கொண்டவர் விட்டு விட்டு போய் விட தனியொரு பெண்ணாய் வாழ்க்கையை எதிர்கொண்டார். மொத்த குடும்பமும் கணவனும் புறக்கணிக்க பவானியம்மாவுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. அது அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதுதான்.

பவானியம்மாவின் குழந்தை

பார்த்து வந்த ஆசிரியர் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானித்தார். 62 வயதில் ஒரு பெண் குழந்தை பெற்றிருக்கிறார் என்ற செய்தியும் அவரது கதையும் என்னை துரத்த நான் கேரளம் கிளம்பிச் சென்றேன்.

அப்பெண்ணின் கடந்த கால துயரங்கள். வாழ்க்கை போராட்டங்கள் யாவையும் புதிதாகப் பிறந்த குழந்தை மூலம் தீர்த்துக் கொண்டிருந்தார். அவரது கதையை “62 வயதில் அம்மா” என்று விகடனில் எழுதினேன். பெரிய ரெஸ்பான்ஸ் இருந்தது அந்த ஸ்டோரிக்கு. அந்த ஹ்யூமன் ஸ்டோரியை சில மலையாள அச்சு ஊடகங்களே மொழியாக்கம் செய்து பிரசுரித்திருந்தது.
பின்னர் மூன்று ஆண்டு கழித்து அந்த குழந்தை துரதிருஷ்டவசமாக இறந்து விட்டது. பவானியம்மா தனிமையில் கிடந்தார். தனிமையிலேயே வாழ்ந்திருக்கிறார். இப்போது தனிமையாகவே தன்னை விடுவித்தும் கொண்டார். பவானி டீச்சர் ஒன்றும் சாதாரண மனிதரல்ல சுற்றியுள்ள பல லட்சம் பெண்களுக்கு நம்பிக்கை ஒளியாக ஒரு விளக்கை ஏந்தியிருந்தார். அந்த விளக்கு அணைந்து விட்டது!

குறிப்பு: -டி.அருள் எழிலன்

முக்கிய செய்திகள்

முதல்வராக்கிய சசிகலா பதவியை பறித்தார் எடப்பாடி பழனிசாமி!

“சீட்டில் இருந்து இழுத்து வீச வேண்டிய நேரம் வந்து விட்டது”: தினகரன் ஆவேசம்!

அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!

ஜெ உடல்நிலை குறித்த ரிப்போர்ட்டை தினமும் கேட்டார் மோடி : நடராஜன்

துவங்கியது குதிரை பேரம்: குடகில் தினகரன் அணி முற்றுகை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*