குழந்தையை கொன்றவர் விடுதலை:நீதித்துறை மீது நம்பிக்கை இழந்த தந்தை!

எடப்பாடி அரசு கவிழாது ஏன்?

சென்னை போரூர் அருகில் உள்ள மதனந்தபுரத்தில் 7 வயது குழந்தை ஹாசினியை கடத்தி பாலியல் வன்முறை செய்து எரித்து கொலை செய்த ஜஸ்வந்த் தர்ஷன் என்பவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது பாதிக்கப்பட்ட பெற்றோரை நிம்மதியிழக்கச் செய்துள்ளது.
போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் நிகிதா என்ற அப்பார்ட்மெண்டில் ஆந்திராவைச் சேர்ந்த பாபு என்பரின் குடும்பம் வசித்து வந்தது. இவர்களுக்கு ஹாசினி என்ற 7 வயது குழந்தை இருந்தது. இரண்டாம் வகுப்பு படித்து வந்த ஹாசினி கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி காணாமல் போனார்.

குற்றவாளி ஐஸ்வந்த்

இதையடுத்து விசாரணை செய்த போலீசார் அதே குடியிருப்பில் வசிக்கும் 22 வயது ஐஸ்வந்த் என்பவரை கைது செய்தார்கள். 5-ஆம் தேதி ஹாசினியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்த போது அக்குழந்தை கத்த தலையணையால் அக்குழந்தையை அழுத்தி கொலை செய்து விடுகிறார். பின்னர் அக்கொலையை மறைக்க குழந்தையின் சடலத்தை பெட்டியில் வைத்து தாம்பரம் புறவழிச்சாலையில் முட்புதர்களுக்கு மத்தியில் பெட்ரோல் விட்டு எரித்து விடுகிறார். இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் பொதுமக்கள் சாலை மறியல் வரை ஈடுபட்டார்கள்.
ஐஸ்வந்த் தர்ஷனை கைது செய்த போலீசார் ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் மீது குண்டர் சட்டத்தையும் பிரயோகித்தனர். இந்நிலையில் “தன் மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று ஐஸ்வந்த் தர்ஷனின் தந்தை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது போலீசார் உரிய பதிலளிக்காத காரணத்தால் ஐஸ்வந்த் தர்ஷன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகிறார்.
இந்நிலையில் சிறுமி ஹாசினியின் தந்தை பாபுவிடம் பேசினோம்:-

நீதி கேட்டு போராடிய குன்றத்தூர் மக்கள்

“என் 7 வயது குழந்தையை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த கொலைகாரன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த சம்பவம் நடந்த போது மக்கள் போராடினார்கள். இப்போது நான் தனித்து விடப்பட்டிருக்கிறேன். எனக்காக பேசவோ போரடவோ யாரும் இல்லை. அவர்கள் ஆளும் கட்சி வழக்கறிஞரை வைத்து செல்வாக்குள்ளவர்களை பிடித்து விடுதலையாகி விட்டார்கள். நான் நீதித்துறை மீதும் இந்த அரசு மீதும் நம்பிக்கை இழந்து விட்டேன். நான் செய்ய முடியும். ரொம்ப வேதனையோடு இருக்கிறேன்” என்று கதறியழ துவங்கி விட்டார்.குழந்தையை இழந்த அந்த அப்பாவி தந்தையின் நிலை யாருக்கும் வரக்கூடாது!

முக்கிய செய்திகள்

மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை பாதுகாக்கும் ஆளுநர்!

மருத்துவக் கல்வியில் 5 அரசுப்பள்ளி மாணவர்கள்:நீதிபதி சொன்ன காரணம்…!

“ஸ்லீப்பர் செல்கள் யார் ?நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தெரியும்”-தினகரன்

7 லட்சம் அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா?

துவங்கியது குதிரை பேரம்: குடகில் தினகரன் அணி முற்றுகை!

அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!

ன்று காலில் விழுந்தார்”இன்று கவிழ்த்தார்…!Video

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

ஒரே நாளில் 107 மாணவர்களை சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு சாதனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*