நாங்களும் கௌரிகள்தான்: லங்கேஷுக்காக திரண்ட ஆயிரக்கணக்கானோர்!

என்னங்க சார் உங்க சட்டம்!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

பெங்களூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று மாபெரும் பேரணி பெங்களூரில் நடந்தது.

ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், மாணவர்களும், பல முன்னணி அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பெங்களூர் ரயில் நிலையத்தில் திரண்ட மக்கள் பிறகு பெங்களூர் வீதிகளில் சென்று கோஷமிட்டனர்.

கௌரியின் நிலை தான் உங்களுக்கும் :கேரள இந்து தலைவர் மிரட்டல்! 

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினி­ஸ்ட்), கர்நாடக ஜனசக்தி, ஆம் ஆத்மி ஆகிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் சில மாணவர் அமைப்புகளும் பேரணியில் பங்கு கொண்டனர்.

கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் அவர் வீட்டின் வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தன் பெயரில் டேப்லாய்டு பத்திரிக்கை ஒன்றை நடத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் போராட்ட பாடல்களை பாடி, ‘ கௌரி லங்கேஷ் வாழ்க’ என கோஷமிட்டனர்.

இப்பேரணியில் சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி, பத்திரிக்கையாளர்கள் சகரிகா கோஸ்,பி சாய்நாத், சமூக ஆர்வலர் மேதா பட்கர், ஆவணப்பட இயக்குனர் அனந்த் பட்வர்த்தனன்,குடியுர­ிமை ஆர்வலர்கள் தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் பங்கு கொண்டனர்.

 

 

மதச்சடங்குகளின்றி ஆடல் பாடலோடு விடை பெற்ற கௌரி லிங்கேஷ்!

அவர்கள் ஏன் கௌரி லங்கேஷைக் கொலை செய்ய வேண்டும்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*