தமிழக அரசியல்: ரஜினியை சீண்டும் விஷால்!

ஃபெப்ஸி தொழிலாளர்கள் உரிமையை புதைத்த ரஜினியின் ‘காலா’ பின்னணி தகவல்கள்!

எடப்பாடி அரசு கவிழாது ஏன்?

சசிகலா நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!

“இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகிறோம்”-திமுகவோடு கைகோர்க்கும் தினகரன்!

தமிழ் திரையுலகில் இன்னும் பெரிதாக சாதிக்காத விஷால், ஊடகங்களின் பார்வையிலேயே இருக்கிறார். அதற்கு காரணம் நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் என எல்லாத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொண்டது. சமீபத்தில் கூட அனிதாவின் மரணத்துக்கான கண்டனக் கூட்டத்தில் பேசிய விஷால், அனிதாவை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

[இதையும் வாசிங்க: அரசியலுக்கு வருவாரா விஷால்?]

காவிரி உரிமை பேசிய விஷால்

இந்நிலையில் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால், இங்கே எழுச்சி தேவைப்படும் சமயத்தில் நான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மாற்றம் என்பது மட்டுமே நிலையானது என்ற நம்பிக்கையுடையவன் நான், மற்றவர்கள் போல் ‘கடவுள் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்’ என்று சொல்ல மாட்டேன். நான் நேரடியாகவே பேசுகிறேன், எழுச்சி தேவைப்படும் சமயத்தில் நான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். அதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் என்னை முன்பே அரசியலுக்கு அழைத்தார்கள், நான் அதை எனக்கான மாற்றுப் பாதையாக நினைக்கவில்லை. அதனால்தான் திரைத்துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கேள்வி கேட்டால், அவர் கூறும் பதில்தான் ‘கடவுள் நினைத்தால் வருவேன்’ என்பது, அதுபோல் கூறமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் விஷால். இதன்மூலம் நீண்ட காலமாக அரசியலுக்கு வருகிறேன் என்று தெரிவித்த ரஜினியை கலாய்த்திருப்பதாகவே தோன்றுகிறது.

விஷாலை கண்டுகொள்ளாத அரசாங்கம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*