தினகரன் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால்?

என்னங்க சார் உங்க சட்டம்!

7 வயது குழந்தையை பாலியல் வன்முறை செய்து கொன்றவரை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம்

ஒரே நாளில் 107 மாணவர்களை சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு சாதனை!

எடப்பாடி அரசு கவிழாது ஏன்?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய சபநாயகர் தனபால் ஆலோசனை செய்து வருகிறார்.
கடந்த மாதம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் கொடுத்து. சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்யை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்கள். இதே கோரிக்கையை திமுகவும் ஆளுநரிடம் முன் வைத்த நிலையில். ஆளுநரோ ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆளுநர் மீது நம்பிக்கை இழந்த திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டு வரும் நிலையில், நெருக்கடிகளைச் சந்தித்து வரும் தமிழக அரசு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்வது பற்றி ஆலோசித்து வருகிறது.

மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை பாதுகாக்கும் ஆளுநர்!

மருத்துவக் கல்வியில் 5 அரசுப்பள்ளி மாணவர்கள்:நீதிபதி சொன்ன காரணம்…!
தமிழக அரசு கொறடா கேட்டுக்கொண்டதன் பேரில் சபாநாயகர் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கு நேரில் விளக்கம் அளிக்க வெண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீசுக்கு தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் விளக்கம் அளித்து எடப்பாடி அணிக்கு தன் ஆதரவை தெரிவித்து விட்ட நிலையில், சபாநாயகர் கொடுத்த கெடு இன்றோடு முடிவடைகிறது.
சில தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் கூடுதல் கால அவகாசம் கேட்டனர். வெற்றிவேல் எம்.எல்.ஏ வும் கூடுதல் அவகாசம் கேட்டார் இதை தனபால் கொடுக்க மறுத்து விட்டார். தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தனபால் உள்ளிட்ட அமைச்சர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வது பற்றி ஆலோசித்து வருகிறார்கள்.
ஆனால் அரசுக்கு பெரும்பான்மை பெற 117 எம்.எல். ஏக்கள் வேண்டும் இன்னும் ஏழு எம்.எல்.ஏக்கள் குறைவாக உள்ள நிலையில் இவர்களை தகுதி நீக்கம் செய்யவும் முடியாது அதனால் இவர்களை சட்டமன்ற நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்வது பற்றியும் ஆலோசிக்கிறார்கள். ஆனால் அதுவும் செய்ய முடியாது என்பதே இப்போதுள்ள சிக்கல். தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வந்தால் அவர்களை தூக்கிச் சென்று 20 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை அடைத்து வைப்பது இதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் திட்டம்.

முக்கிய செய்திகள்

 

“ஸ்லீப்பர் செல்கள் யார் ?நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தெரியும்”-தினகரன்

7 லட்சம் அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா?

துவங்கியது குதிரை பேரம்: குடகில் தினகரன் அணி முற்றுகை!

அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!

ன்று காலில் விழுந்தார்”இன்று கவிழ்த்தார்…!Video

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

ஒரே நாளில் 107 மாணவர்களை சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு சாதனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*