பணமதிப்பிழப்பு தோல்வி:நஷ்ட ஈடு கேட்கும் அச்சகங்கள்…!

மோடி இதுவரை பெற்ற இந்தியாக்கள் இவை:டி.அருள் எழிலன்

மாதவிடாயின் இரண்டாம் நாள்! #periods_pain

அரசு ஊழியர்களை அடிபணிய வைத்த நேர்மை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

நீட்டை நீக்கும் வரை போராடுவோம்”நீதிபதியிடம் நெஞ்சம் நிமிர்ந்த மாணவன்!

ஜி.எஸ்.டி குஜராத்தில் லட்சக்கணக்கானோர் போராட்டம்!

என்னங்க சார் உங்க சட்டம்!

அரசுக்கு தேவையான பணத்தை அச்சடித்துக் கொடுக்கும் நிறுவனங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு 577 கோடி இழப்பீடு தருமாறு ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. இது மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியை இன்னொரு ஆதாரத்துடன் அம்பலமாக்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு முன்னறிவிப்பு எதுவும் இன்றி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் மோடி. நாடு முழுக்க அதனையொட்டி அசாதாரண சூழல் நிலவியது. பெரும்பாலான  ஊடகங்கள் உண்மையை மறைத்த நிலையில் 200-க்கும் அதிகமானவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்வேறு சூழல்களில் இறந்தார்கள். பல மாதங்கள் ஆன போதும் நிலமை சீரடைய வில்லை. பொருளாதாரமும் மேம்படைய வில்லை. பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் நாடு முழுக்க பல லட்சம் ஊழியர்கள் வேலையயும் இழக்க நேரிட்டது. இப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்கிற விமர்சனம் எழுந்து வரும் நிலையில்,

அரசுக்காக ரூபாய் நோட்டை அச்சடித்து கொடுக்கும் அச்சகங்கள், கடந்த நவம்பர் மாதம் அமலுக்கு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு  577 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்பது  வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அரசு அதிகாரிகளும்,ரூபாய் நோட்டு அச்சுத்துறையில் செயல்படும்  அதிகாரிகளும்,  “இந்த அச்சங்கள் எதற்கும் வேறு  எந்த வணிக ரீதியான வேலைகளையும் எடுப்பதில்லை. அதனால் அவைகளுக்கு வருவாயும் கிடையாது. அரசுக்கு தேவையான அச்சு வேலைகளை மட்டுமே செய்து கொடுக்கிறது. இந்நிலையில், நிச்சயமாக இந்த நஷ்டத்திற்கு இழப்பீடு கொடுத்து தான் ஆக வேண்டும். இதைப் பற்றி ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கின்றன’ என கூறியிருக்கின்றனர்.

500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை அச்சடிக்க பயன்படுத்தப்படும் தாள்களை இறக்குமதி செய்ததற்காகவும், ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க பயன்படுத்தப்படும் மை வீண் ஆனதற்கும், அச்சடித்த பின்னரும் அச்சகங்களிலேயே மூட்டை மூட்டையாக  முடங்கிக்கிடக்கும் தாள்களுக்கும் ஆன செலவுகளை கணக்கில் வைத்தே ரூபாய் 577 கோடி நஷ்ட ஈடு கேட்டிருக்கின்றன அச்சகங்கள்.

ரிசர்வ்  வங்கியிடம் கேட்கப்பட்டிருக்கும்  இந்த தொகை நான்கு அச்சகங்களின் நஷ்டத்தை சேர்த்து கணக்கிடப்பட்டதாகும். இந்தியாவில் குடிமக்களுக்கு தேவையான ரூபாய் நோட்டு நான்கு அச்சகங்களில் அச்சாகிறது.  இந்தியாவின் பொதுத்துறை பாதுகாப்பு அச்சு கார்ப்பரேஷன் (லிமிட்) நிர்வாகத்தின் கீழ் இரண்டு பணத்தாள் அச்சகங்கள் இருக்கின்றன. அவை நாசிக்கிலும், தேவஸ் எனும் இடத்திலும் உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் (லிமிட்) நிர்வாகத்தின் அச்சகங்கள் இரண்டு மைசூரிலும், மேற்கு வங்காளத்தின் சல்போனியிலும் இருக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*