சாரணர்-சாரணியர் தேர்தல்:எச்.ராஜா தோல்வி!

எச்.ராஜா பெற்ற வாக்குகள் எவளவு தெரியுமா?

சாரணர் தேர்தல்: வென்ற மணிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

சோத்துக்கு வழியில்லாம நிக்கிறமே லோ லோ (#வைரலாகும்_பாடல்)

அந்த 18 எம்.எல்.ஏக்களும்..ஓபிஎஸ்-இபிஎஸ் உள்குத்தும்!

பணமதிப்பிழப்பு தோல்வி:நஷ்ட ஈடு கேட்கும் அச்சகங்கள்…!

அரசு ஊழியர்களை அடிபணிய வைத்த நேர்மை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

மாதவிடாயின் இரண்டாம் நாள்! #periods_pain

என்னங்க சார் உங்க சட்டம்!

சாரணர்-சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பாஜக தேசிய தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா தோல்வியை தழுவியுள்ளார்.
தமிழ்நாடு சாரண- சாரணியர் இயக்கத்தின் புரவலராக ஆளுநரும், துணைப் புரவலராக கல்வி அமைச்சரும்  இருக்கிறார்கள். இவ்வியக்கத்தின் தலைவர் பதவி தேர்தல் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பாஜக தமிழகத்தில் செல்வாக்குப் பெற முயலும் நிலையொல் சாரண-சாரணியர் இயக்க தலைமைப் பதவியை பாஜக தலைவராக எச்.ராஜா குறிவைத்திருந்தார். தன் ஆதரவாளர்களை குழு உறுப்பினர்களாக உள்ளே நுழைத்து எளிதில் வென்று விடலாம் என்று எச்.ராஜாவும் ஆளும் அதிமுக அரசும் திட்டமிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு எச்.ராஜா, முன்னாள் பள்ளி கல்வி இயக்குநர் ப.மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி தலைமையில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நடந்த இடத்தில் போட்டியிடும் தலைவர்கள் இருவருமே இருந்தார்கள்.
மொத்தம் 499 வாக்குகளைக் கொண்ட இந்த தேர்தலில் தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை 10.20 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
வழக்கத்துக்கு மாறாக பரபரப்புடன் இந்த தேர்தல் நடைபெறுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.ஓட்டுப்பதிவு நடந்த போதே தேர்தல் அதிகாரியிடம் சென்று ராஜா ஆட்கள் தேர்தலை நிறுத்துமாறு பிரச்சனை செய்தார்கள். ஆனால் தேர்தல் முறையாக நடப்பதால் முறைகேடுகள் எதுவும் இல்லை என்று கூறினார் தேர்தல் அலுவலர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த முடிவுகளின் படி எச்.ராஜா  தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மணி வென்றுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

ஒரே நாளில் 107 மாணவர்களை சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு சாதனை!

எடப்பாடி அரசு கவிழாது ஏன்?

7 லட்சம் அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா?

அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!

ன்று காலில் விழுந்தார்”இன்று கவிழ்த்தார்…!Video

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

 

மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை பாதுகாக்கும் ஆளுநர்!

மருத்துவக் கல்வியில் 5 அரசுப்பள்ளி மாணவர்கள்:நீதிபதி சொன்ன காரணம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*