சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் கூட்டணி: மணிரத்னம்

‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு புதிய டீமுடன் களமிறங்கியிருக்கிறார் மணிரத்னம். ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருடன் பணிபுரிகிறார் என கூறப்பட்ட நிலையில், பெயரிடப்படாத அந்தப் படத்தில் சிம்பு, ஃபகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மணிரத்னத்தின் இயக்கத்துக்கு புதியவர்கள்.

சிம்பு தற்போது ஹாலிவுட் பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்கு முன்பே அதன் வேலைகளை முடித்துவிட்டு மணிரத்னத்தின் ப்ராஜெக்டில் இணைகின்றார். இந்தப் படத்துக்கும் வழக்கம்போல் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ள இந்தப் படம், ஆக்சன் த்ரில்லராக உருவாகவுள்ளது. ஒளிப்பதிவு வேலைகளுக்கு சந்தோஷ் சிவன் புக் செய்யப்பட்டிருக்கிறார். இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*