இந்துக் கோவிலில் வழிபட அனுமதி கேட்கும் பாடகர் ஜேசுதாஸ்!

பெரியாருக்கு மரியாதை:ஏன் தவிர்த்தார் எடப்பாடி:பின்னணி!

எச்.ராஜா தோல்வி: அந்த 51 பேர் யார்?

ச்.ராஜாவை வீழ்த்தி எப்படி வென்றார் மணி! 

“எழுத சலிப்பாக இருக்கிறது-மூளை தெளிவாக இல்லை”- பெரியாரின் அரிதான பேட்டி!
ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் திருவனந்த புரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் வழிபாடு நடத்த தாத்ரிகளிடம் அனுமதி கோரியிருக்கிறார்.தமிழ், மலையாளம் உட்பட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பாடகர் ஜேசுதாஸ் .பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.
அடிப்படையில் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிகமும் அவர் பாடியிருப்பது இந்துக் கடவுள்களைப் பற்றி குறிப்பாக அவர் பாடியுள்ள அய்யப்பன் பாடல்கள் பக்தர்களிடையே ரொம்பவே பிரபலம்.கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அவர் செல்கிறாரோ இல்லையோ ஐய்யப்பன் கோவில் உள்ளிட்ட இந்துக்கோவில்களில் வழிபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு இவர் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இதேபோல், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கடம்புழா தேவி அம்மன் ஆலயத்திற்கு சென்ற போதும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் வழிபடச் செல்லும் போது தன்னை உள்ளே நுழைய விடாமல் தடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் வருகிற 30-ம் தேதி விஜயதசமி தினத்தன்று பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட விண்ணத்துள்ளார்.
இந்தியாவின் மிகச்சிறந்த பாடகரான கே.ஜெ.ஜேசுதாஸ் இந்துக் கோவில்களுக்கு செல்வதாலும் இந்துக்கடவுள்களைப் பாடுவதாலும் கத்தோலிக்கர்களாலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். பல நேரங்களில் இந்து மதவாதிகளும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். கோவில்களுக்குள் நுழைவதை தடுத்தும் இருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

ஒரே நாளில் 107 மாணவர்களை சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு சாதனை!

எடப்பாடி அரசு கவிழாது ஏன்?

7 லட்சம் அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா?

அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!

ன்று காலில் விழுந்தார்”இன்று கவிழ்த்தார்…!Video

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை பாதுகாக்கும் ஆளுநர்!

மருத்துவக் கல்வியில் 5 அரசுப்பள்ளி மாணவர்கள்:நீதிபதி சொன்ன காரணம்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*