சசிகலாவை பாம்பாக கொத்திய அமைச்சர் ஜெயக்குமார்!

ன்னீருக்காக பலி கொடுக்கப்பட்ட ஜெயக்குமார்!

ஆழ்ந்த யோசனை, கவலையில் அமைச்சர் ஜெயக்குமார்!

அமைச்சர் ஜெயக்குமார் பொதுவாக அமைதியானவர். அதிமுகவில் அனைவருக்கும் வேண்டியவர். தொண்டர்களிடமும் சரி இரண்டாம் மட்ட தலைவர்களிடமும் சரி அதிர்ந்து பேசாமல் நாகரீகமாக பேசக்கூடியவர் என்று பெயர் எடுத்தவர். ஜெயலலிதாவால் அதிமுக தலைவர்கள் அவ்வப்போது தண்டனைக்குள்ளான போதும் ஜெயக்குமார் மட்டும் எப்போதும் ஜெயலலிதாவின் சீற்றத்துக்கு ஆளானதில்லை. அவளவு நன்மதிப்பைப் பெற்ற ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமிக்காக கொந்தளித்து தீர்க்கிறார்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அணியினரும் பன்னீர்செல்வம் அணியினரும் பிரிந்து நின்று மோதிக் கொண்ட போது ஜெயக்குமாரை வைத்துதான் எடப்பாடி பழனிசாமி பன்னீர் அணியினரை பதம் பார்த்தார். மிகக்கடுமையான வார்த்தைகளால் பன்னீர் அணியினரை சாடி வந்த ஜெயக்குமார் மீது பன்னீர் அணியினர் செம கடுப்பில் இருந்தனர். இரு அணிகளும் இணைந்த போது ஜெயக்குமார் கையில் இருந்த மூன்று முக்கியமான பொறுப்புகளை பிடுங்கி பன்னீர்கையில் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி,
மிண்டும் மீன்வளத்துறைக்கே வந்த அமைச்சர் ஜெயக்குமார் கவலையில் அப்செட்டாக சில வாரங்கள் இருந்த பிறகு அவரை சமாதானப்படுத்தி மறுபடியும் களத்திற்கு கொண்டு வந்திருக்கிறாகள்.
தினகரன் அணியினரை பன்னீரோ அவருடைய அணியினரோ தாக்குவதில்லை. அவர் எடப்பாடி பழனிசாமி குழுவை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார். இந்த மோதலில் அமைச்சர்கள் பலர் பங்கேற்றாலும் ஜெயக்குமாரின் வார்த்தைகள் இன்று கடுமையாக இருந்தது.

அமைச்சர் ஜெயக்குமாரை உலக மேதை என்று சொன்னவர்  யார் தெரியுமா? இதை  வாசிங்க…
நேற்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“ பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்புதான் சசிகலா . பரமசிவன் கழுத்தில் இருந்து விழுந்த தீண்டத்தகாத பாம்பு சசிகலா.மன்னார்குடி மாபியா கும்பல் 21 பவர் சென்டர்கள் மூலம் தமிழகத்தை ஆட்டி படைத்து வந்தனர் “ என்றார்.
ஜெ மறைவுக்குப் பின்னர் அணி அணியாக பிரிந்து நின்று அடித்துக் கொள்கிறார்கள். இணைந்தவர்களுக்குள் மட்டும் ஒற்றுமை இருக்கிறதா? பன்னீர்செல்வம் அணியினரே அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசுவதில்லை. அரசும் கட்சியும் எடப்பாடி பழனிசாமி அணி பன்னீசெல்வம் அணி என இரண்டாக பிரிந்திருக்கிறது.

பன்னீர்செல்வம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் அடித்த கமெண்ட் என்ன வாசிக்க க்ளிக் பண்ணவும்…
நாளை என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். இந்த ஆட்சி கவிழலாம் இந்த அணியில் இருந்து பலரும் தினகரன் இலையில் அமரலாம். என்ற நிலையில் இருந்துதான் ஜெயக்குமாரின் வார்த்தைகளைப் பார்க்க முடியும். பரமசிவன் கழுத்தில் இருந்து விழுந்த பாம்பு அதுவும் தீண்டத்தகாத பாம்பு என்னும் போது அதில் எவளவு கேள்விகள் எழுகின்றன.
எடப்பாடியை முதல்வராக்கி ஜெயக்குமாருக்கு நிதியமைச்சர் பதவியையும் கொடுக்கும் போது சசிகலா தீண்டத்தகாத பாம்பாக தெரியவில்லையா? என்ற கேள்வியை அதிமுக தொண்டர்களே கேட்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

மூன்றாம் பிறை க்ளைமாக்ஸ்தான் கமலுக்கு: அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்! # video

’ஜெ’ பாணியில் திமுகவுக்கு பதில் சொன்ன ஜெயக்குமார்!

வலியச் சென்று வம்பில் சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*