21 திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் பண்ண திட்டம்!

பேரறிவாளன் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் மனு!

திருமுருகன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

ஜனநாயகப் படுகொலை:18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம்!

 

ஏன் உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்தாது?

புதன் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது: திமுக-தினகரனுக்கு பின்னடைவு…!

எடப்பாடி அரசு கவிழாது ஏன்?

என்னங்க சார் உங்க சட்டம்!

தினகரன் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால்?

7 வயது குழந்தையை பாலியல் வன்முறை செய்து கொன்றவரை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம்

ரே நாளில் 107 மாணவர்களை சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு சாதனை!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது போல திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேரை சஸ்பெண்ட் பண்ணலாமா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சபநாயகர் தனபாலும் ஆலோசித்து வருகிறார்கள்..
குட்கா விவகாரத்தை கையில் எடுத்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குரல் எழுப்பிய போது பெட்டிக்கடைகளில் கூட தாராளமாக விற்கப்படும் குட்காவை கையில் கொண்டு வந்து சபையில் காட்ட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டது. இவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகரால் நோட்டீசும் அனுப்பட்டது.
இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க 15 நாள் கால அவகாசம் கேட்ட நிலையில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலை வைத்து திமுக வாதாடி திமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கைக்கு தடை பெற்றுக் கொண்டது.அக்டோபர் 12 வரை இத்தடை நீடிக்கிறது.
தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரை சஸ்பெண்ட் பண்ணிய நிலையில் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்த சஸ்பெண்ட் தொடர்பாக பெரும்பாலும் கருத்துச் சொல்லியிருப்பவர்கள் பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவி பெற முடியாது.தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்கிறார்கள்.
குறிப்பாக நீதித்துறை மூலம் இப்போதைக்கு நீதி பெறும் சூழல் இல்லை. இந்நிலை தினகரன் அணிக்கு மட்டுமல்ல திமுகவுக்கும்தான். அரசும் ஆளும் கட்சியும் நீதிமன்றத்தை சூழலை பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியும். உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக கோர்ட்டுக்கு போன போது அந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தது நீதிமன்றம்.
இப்போது திமுக தேர்தலை நடத்த விரும்புகிறது. ஆளும் கட்சியோ தேர்தலை தள்ளிப்போட விரும்புகிறது அதற்கு ஏற்றார் போல நீதிமன்றத்தையும் கையாள்கிறார்கள். இப்போது 18 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார்கள். ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் வர வேண்டும் எனும் நிலையில் இந்த இடைத்தேர்தலை நடத்தவே நீதிமன்றத்துக்குச் சென்று பெரும்பாடு பட வேண்டிய சூழல்தான் ஏற்படும்.
ஆர்.கே.நகர் தொகுதியிலும் தேர்தலை அறிவிக்க நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கிறது. இப்படியான சூழலில் 89 உறுப்பினர்களோடு வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்க எடப்பாடி பழனிசாமி சதி செய்து வருகிறார்.
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஜனநாயக படுகொலைகளும் கவர்னரின் கண்பார்வையில்தான் நடக்கிறது. சில வாரங்கள் முன்னர் கூட கவர்னரை நம்புகிறோம். என்றெல்லாம் பலரும் பேசி வந்தார்கள்.
ஆனால் ஒரு மைனாரிட்டி அரசு 18 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு ஜனநாயக படுகொலையைச் செய்ய ஆளுநரே பிரதான காரணம். அவர்களின் கண்பார்வை இப்போது திமுக மீது பட்டிருக்கிறது. நீதிமன்ற தடையை நீடிக்க முடியாமல் போனால் அதிமுகவின் 21 உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் பண்ணலாமா என யோசிக்கிறார்கள் எடப்பாடி பழனிசாயும், பன்னிர்செல்வமும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*