அமெரிக்க திரைப்பட விழாவில் ‘பாட்ஷா’?

ரஜினியாலும் அவரது ரசிகர்களாலும் நிச்சயமாக மறக்க முடியாத திரைப்படம் ‘பாட்ஷா’. எப்போது திரையிட்டாலும் இந்த படத்துக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் திரையரங்கை நோக்கி செல்வார்கள். சமீபத்தில் ‘பாட்ஷா’ படத்தின் டிஜிட்டல் ரீ-மாஸ்டர்ட் வெர்சன் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தை அமெரிக்காவில் நடைபெறும் 12-ஆவது ஃபென்டாஸ்டிக் திரைப்பட விழாவில் திரையிடவுள்ளனர்.

உலகம் முழுவதுமாக வெவ்வேறு பிரிவு சார்ந்த படங்களை தேர்தெடுந்து அதை திரையிடுவதுதான் இந்த ஃபென்டாஸ்டிக் திரைப்பட விழா. இந்தியாவில் மிகவும் பிரபலமான பல திரைப்படங்கள் இதற்கு முன்பு இங்கே திரையிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ‘பாட்ஷா’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. கடந்த ஆண்டு கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, “செப் 21- செப் 28 வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில், செப் 24 மற்றும் செப் 26 ஆகிய தேதிகளில் ‘பாட்ஷா’ திரையிடப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*