
‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தில் பணிபுரியும் வேளையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் என செய்திகள் வெளியானது. இந்த ஜோடியும் அதை மறைக்காமல் ஏற்றுக் கொண்டனர். ‘சைமா’ திரைப்பட விழாவில் விருது வாங்க இவர்கள் இருவரும் ஒன்றாக வந்து அந்த மேடையில் அதனை உறுதி செய்தனர். அதன்பிறகு இவர்களை பற்றிய செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையில், விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாட அமெரிக்காவுக்கு பயணித்திருக்கிறார்கள் இந்த ஜோடி.
அமெரிக்காவின் ப்ருக்லின் பாலத்தில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா எடுத்துக்கொண்ட இந்த செல்பி வைரலாகி வருகிறது. ஒருமுறை நயன்தாராவுடனான உடனான உறவு பற்றி விக்னேஷிடம் கேட்டதற்கு, “அது என் மனதுக்கு நெருக்கமான விசயம், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை” என்று தெரிவித்தார். ஆனால் இருவரும் காதல் என்பதை மறுக்காமல் தங்கள் உறவில் பயணிக்கின்றனர்.
Leave a Reply