ராம்லீலா நாடகத்தில் அரசியல்வாதிகள்!

இந்த வருடம் தில்லியின் ராம் லீலா மைதானத்தில், திரை நடிகர்களோடு இணைந்து அரசியல்வாதிகளும் நாடகத்தில் நடிக்கப் போகிறார்கள்.

தில்லியின் மிகப் பழைமையான ராம்-லீலா நிர்வாகிகளாக லவ குஷ் ராம் லீலா கமிட்டி இந்த வருட ராமாயண நாடகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நடிக்க வைக்கவிருக்கிறது.

சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சர் விஜய் சம்ப்ளா, தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி,பாஜக தலைவர் விஜேந்தர் குப்தாவின் மனைவி ஷோபா விஜேந்தர், வட தில்லி மேயர் ப்ரீத்தி அகர்வால் உட்பட பலரும் நாடகத்தில் பங்கு கொள்ளப் போகிறார்கள்.

ராம்லீலாக்கள் 350 வருடங்களுக்கு முன்னர், ஷாஜகான் தன் தலைநகரை ஆக்ராவிலிருந்து தில்லிக்கு மாற்றி ஷாஜஹனாபாத் கட்டியபோது தொடங்கியது என நம்பப்படுகிறது. முதன்முதலில் யமுனை நதிக் கரையோரம் நடந்ததாக சொல்லப்படும் திருவிழா,பிறகே, ராம் லீலா மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேய ஆட்சியாளர்களும், சுதந்திரத்திற்கு பின் இந்திய பிரதமர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர். செப்டம்பர் 21 தொடங்கி அக்டோபர் 1 வரை நாடகங்கள் அரங்கேற்றப்படவிருக்கின்றன.

நயன்தாராவின் காதல் சுற்றுலா?

அமெரிக்க திரைப்பட விழாவில் ‘பாட்ஷா’?

ட்ரம்ப் வீட்டை அகதிகளுக்கு வாடகைக்கு விட்ட ஆர்வலர்கள்!

ரிசர்வ்டு கோச்சில் நீங்கள் எத்தனை மணி நேரம் தூங்கலாம் தெரியுமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*