ஜெயேந்திரரை சந்திக்க: எடப்பாடி பழனிசாமி நாடகம்! video

தகுதி நீக்கம்- ஆறப்போட்ட நீதிமன்றம்: திணறும் எதிர்க்கட்சிகள்!

எட்டிப்பார்க்கும் ஸ்லீப்பர் செல்: ராஜன் செல்லப்பா!

தேர்தலுக்கு தயார்:திமுக நடத்தப் போகும் அந்த பிரமாண்ட பேரணி…!

தினகரனுக்காக இன்று ஆஜராகும் வழக்கறிஞர் துஷ்யந்த்தவே யார் தெரியுமா?

திமுக எம்.எல்.ஏக்கள் சென்னையில் இருக்க உத்தரவு!

திருச்சியில் பிரமாண்டம் காட்டிய தினகரன்!

அர்ஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி:கவலைக்கிடம்…!

மோடி பாணியில் வேட்டை: 18 பேர் மீதும் வழக்குகள்!
சிறை பொருட்டல்ல: பாஜக-வை விரட்டியடிப்போம்- சிறை வாசலில் திரு…VIDEO!

எடப்பாடி பழனிசாமிக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்பதை அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அவரை முதல்வராக்கிய சசிகலா சிறையில் இருக்க செல்லும் இடமெல்லாம் ஆடம்பர கட் அவுட்டுகளோடு பூரண கும்ப மரியாதையில் திளைக்கிறார்.
காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிகளை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்ட நாடகத்தைக் கண்டு அவர் உடன் இருக்கும் அமாவாசைகளே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திர சரஸ்வதிகளை நவம்பர் 11, 2004 -ல் கைது செய்து சிறையில் அடைத்தவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளவும் ஜெயலலிதாவோடு சமரசமாகப் போகவும் எவளவோ முறை முயன்றும் கூட ஜெயலலிதா ஜெயேந்திரரிடம் இறங்கிச் செல்ல மறுத்து விட்டார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சில பிரமாணப் பெண்களே ஜெயேந்திரரைப் பற்றி ஜெயலலிதாவின் காதுக்கு கொண்டு சென்றதுதான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அதிமுகவினர் யாரும் வெளிப்படையாக ஜெயேந்திர சரஸ்வதியை சந்திப்பதும் இல்லை அடையாளப்படுத்திக்கொள்வதும் இல்லை.
சில நாட்களுக்கு முன்னர் ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியான ஜெயேந்திரர் தொடர்பான விடியோவில் அவர் ஜெயலலிதா பற்றி கூறிய வார்த்தைகள் பொது வெளியில் பலத்த சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில். ஜெயலலிதாவின் வழியில் நின்று ஆட்சி என்று கூறும் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவை எதிரியாக நினைத்த ஜெயேந்திரரை இன்று சந்திக்க போட்ட நாடகம் அமபலமாகி உள்ளது.
அரசு விழாக்களில் மோடியின் படத்தை பெரிதாக வைக்கவும், அரசு திட்டங்கள் அது தொடர்பான பிரச்சாரங்களில் ஜெயலலிதா படத்திற்கு பதிலாக மோடி படம் ஆங்காங்கே மெள்ள துளிர் விட துவங்குகிறது.
பாஜகவின் அடையாளத்தைச் சுமப்பவர்களோடு அடையாளம் காட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஜக்கி வாசுதேவ் விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஜெயேந்திர சரஸ்வதிகளையும் சந்திக்க வேண்டும் என்பது உத்தரவு. “அதனால் என்ன எவளவோ செய்துட்டோம் . இதையும் செய்ய மாட்டோமா” என்று யோசித்த எடப்பாடி சங்கரமடத்தோடு ஏற்கனவே நெருக்கமாக இருந்த ஓ.எஸ்.மணியனை மடத்தில் பேசச் சொன்னார்.அவர்தான் புஷ்கர விழாவுக்கு நீராட வாருங்கள் என்று சொல்ல அதை மட்டும் வைத்தால் நன்றாக இருக்காது என்று நாகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையும் போட்டு அதை ஒரு சாக்காக வைத்து காவிரியின் வடக்குக் கரைக்கு வந்த முதல்வருக்கு சிவபுரம் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.பின்னர் மயிலாடுதுறை காவிரி கரையில் புனித நீராடினார்.
பின்னர் மயிலாடுதுறை, ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோவில் மடத்தில் தங்கியிருந்த காஞ்சி காமகோடி ஜெயேந்திரரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது காவிரி புஷ்கர விழா மலரை ஜெயேந்திரர் வெளியிட எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.புஷ்கரத்தில் நீராட வருவதையும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையும் சாக்காக வைத்து ஜெயேந்திரரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இனி வருங்காலங்களில் வெளிப்படையாகவே பாஜக அரசியல் செய்வார் என்றுதான் தெரிகிறது.ஆனால் ஜெயேந்திரரை சிறையில் வைத்த ஜெயலலிதாவின் ஆட்சி இதுதான் என்று எடப்பாடி எப்படி சொல்ல முடியும் என்று கேட்கிறார்கள் அதிமுகவின் அப்பாவி தொண்டர்கள்…!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*