தகுதிநீக்கம் – வழக்கு ஒத்திவைப்பு!

தகுதி நீக்கம்- ஆறப்போட்ட நீதிமன்றம்: திணறும் எதிர்க்கட்சிகள்!

தகுதிநீக்கம் – வழக்கு ஒத்திவைப்பு!

எட்டிப்பார்க்கும் ஸ்லீப்பர் செல்: ராஜன் செல்லப்பா!

தேர்தலுக்கு தயார்:திமுக நடத்தப் போகும் அந்த பிரமாண்ட பேரணி…!

தினகரனுக்காக இன்று ஆஜராகும் வழக்கறிஞர் துஷ்யந்த்தவே யார் தெரியுமா?

திமுக எம்.எல்.ஏக்கள் சென்னையில் இருக்க உத்தரவு!

திருச்சியில் பிரமாண்டம் காட்டிய தினகரன்!

அர்ஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி:கவலைக்கிடம்…!

மோடி பாணியில் வேட்டை: 18 பேர் மீதும் வழக்குகள்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

டி டி வி தினகரன் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே,

“எம் எல் ஏக்கள் வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை, தங்கள் பதவியை ராஜிநானாமாவும் செய்யவில்லை. இந்நிலையில், கட்சித் தாவல் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. முதல்வரின் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.18 பேரை நீக்கிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது.எம் எல் ஏக்கள் வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை, மாறாக,ஊழல் புகார்கள் காரணமாக முதல்வர் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை தெரிவித்தனர்.  சபாநாயகர் ஏன் ஓ பி எஸ் அணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?  சபாநாயகர் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கவில்லை,மேலும் சட்டப்பிரிவுகள்படி குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவில்லை.பழனிச்சாமி அரசை காப்பாற்ற வேண்டுமென்பதே சபாநாயகரின் நோக்கம்.இவர்கள் அடிப்படை உறுப்பினர்களாக நீடிக்கும் பட்சத்தில் கொறடா உத்தரவால் எப்படி இவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்?சபாநாயகரின் இந்த நடவடிக்கை தவறானது, அவர் உண்மையை அறிந்து கொள்ள ஒரு முயற்சியும் செய்யவில்லை.இதன் வழியாக,தமிழக அரசு தில்லியில் இருந்து நடத்தப்படுகிறது என்பது தெரிகிறது. மேலும் தகுதீ நீக்கம் செய்யப்பட்டதாக நோட்டீஸ் இணையத்தில் பதிவேற்றப்பட்டதே தவிர எம் எல் ஏக்களிடம் கொடுக்கவில்லை” என தன் விவாதங்களை முன் வைத்திருக்கிறார்.

சபாநாயகரின் தரப்பில் தோன்றிய அரிமா சுந்தரம், “ நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது. சபாநாயகர் மீதும், அரசின் மீதும் பல குற்றங்கள் சாட்டப்படுவதால் பதிலளிக்க பத்து நாள் அவகாசம் தேவை.அதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படப் போவதில்லை” என கூறினார்.

வாதங்களுக்கு பிறகு,‘மறு உத்தரவு வரும் வரை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது’ என  நீதிபதி துரை சாமி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அக்டோபர் நான்காம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். மேலும், அதுவரை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*