தோனியா? யாரது? – ஜூலி 2 புகழ் ராய் லஷ்மி

ஜூலி 2 என்ற எராடிக் த்ரில்லர் வகை திரைப்படத்தினால் பாலிவுட்டில் ஒரு பிரம்மாண்டமான இமேஜை தனக்கென உருவாக்கிக் கொள்ளப் போகும் நடிகர் ராய் லஷ்மி, ‘தோனியா? யாரது’ என ஆச்சரிமாய் கேட்டிருக்கிறாராம்.

ஆமா, நீங்கள் கேள்விப்பட்டது எல்லாம் சரி தான்.2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு தூதுவராக இருந்த போது தோனியும், ராய் லஷ்மியும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் தான். அந்த உறவு பத்தாண்டுகளுக்கு முன்னரே முடிந்து விட்டதும் உண்மை தான்.

இப்போது, திடீரென யாரோ அந்த பிரபல க்ரிக்கெட்டரை பற்றி கேட்ட போது, “ தோனியா? யாரது? இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம், அது வொர்க் அவுட் ஆக வில்லை அவ்வளவு தான். அதை விட்டுவிட வேண்டும்.நான் அவரை நிறைய மதிக்கிறேன், அதனால் அவரைப் பற்றி பேச விரும்பவில்லை” என பதிலளித்தாராம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*