என் தொலைபேசியை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது:கர்நாடக முதல்வர்!

எடப்பாடி குளிக்க காவிரியில் தண்ணீர் விட்ட தமிழக அரசு!

ஜெயேந்திரரை சந்திக்க: எடப்பாடி பழனிசாமி நாடகம்! video

சிறை பொருட்டல்ல: பாஜக-வை விரட்டியடிப்போம்- சிறை வாசலில் திரு…VIDEO!

தகுதி நீக்கம்- ஆறப்போட்ட நீதிமன்றம்: திணறும் எதிர்க்கட்சிகள்!

எட்டிப்பார்க்கும் ஸ்லீப்பர் செல்: ராஜன் செல்லப்பா!

தினகரனுக்காக இன்று ஆஜராகும் வழக்கறிஞர் துஷ்யந்த்தவே யார் தெரியுமா?

திருச்சியில் பிரமாண்டம் காட்டிய தினகரன்!
சிறை பொருட்டல்ல: பாஜக-வை விரட்டியடிப்போம்- சிறை வாசலில் திரு…VIDEO!
என் தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்கிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் ஆளும் கட்சியாக உள்ளவர்கள். எதிர்க்கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது வாடிக்கை. எதிர்க்கட்சிகளை பிளக்கவும், விலைபேசவும் அவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கிற சர்ச்சை நீண்ட காலமாக உள்ளது.
2010-ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு எதிர்க்கட்சிகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதாகவும் பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் பாஜக கோரியது. இப்போது அதே குற்றச்சாட்டு ஆளும் பாஜக மீதும் சுமத்தப்பட்டுள்ளது. அக்குற்றச்சாட்டை கூறியிருப்பது ஒரு முதல்வர்.கர்நாடக மாநிலித்தில் பாஜக தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று பேசிய சித்தராமையா
“நாங்கள் யாருடைய தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்க வில்லை. அப்படி கேட்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து விடவில்லை.ஆனால் மத்திய அரசுதான் என் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்கிறது. என்னுடையது மட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு குழப்பங்களை உருவாக்க நினைக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்” சித்தராமையா.
1885-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியன் டெலிகிராப்ஃ சட்டம் பிரிவு 5-ன் கீழ் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது. இப்படி ஒட்டுக் கேட்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் PUCL (People Union for Civil Liberties) என்ற மனித உரிமை அமைப்பு 1996-அம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொலைபேசி ஒட்டுக் கேட்கும் சட்டத்தில் உரிய திருத்தங்கள் தெவை என்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வழக்கு தொடர வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொலைபேசி ஒட்டுக்கேட்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தேவையான விதிகளையும் வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அவ்வாறு விதிகள் ஏற்படுத்தப்படும் வரை ஒட்டுக் கேட்பதற்கான அதிகாரம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என வழிகாட்டுதல்களை நீதிமன்றமே வகுத்தது. அதன் பிறகு ஜனவரி 2014-ல் ஒட்டுக் கேட்பதற்கான வழிகாட்டுதல்களை Standard Operating Procedures (SOPs) மத்திய அரசு வகுத்தது.

 

இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69 மற்றும் தகவலை கண்காணித்தல் – இடைமறித்தல் விதிகள் ஆகியவற்றின்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி ஒட்டுக்கேட்கும்அதிகாரம் அரசுக்கு மேலும் முறைப்படுத்தி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பது இன்னும் நின்ற பாடில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*