ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர்: ஆஸ்திரேலிய விளம்பர கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்!

ஆஸ்திரேலிய ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர்: இந்து அமைப்புகள் கண்டனம்! (#Video)

“ஆட்டிறைச்சி” விளம்பரத்தில் விநாயகர்:ஆஸ்திரேலியாவிடம் இந்தியா எதிர்ப்பு!

இலை இனி இல்லை:ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் தாமரை சின்னத்தில் போட்டி!

ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் ஆஸ்திரேலிய விளம்பரத்தில், இந்துக் கடவுட்களில் ஒருவராக வணங்கப்படும் விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் வந்த முறைப்பாடுகளை, The Advertising Standards Bureau தள்ளுபடி செய்துள்ளது.

Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் அமைந்த புதிய வீடியோ விளம்பரத்தில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுட்கள் மற்றும் இறைதூதர்களோடு, விநாயகர் போன்ற வேடமணிந்த ஒருவரும் பங்கேற்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும், அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக பல இந்து அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், இவ்விளம்பரம் தொடர்பில் இந்தியா சார்பில் உத்தியோகப்பூர்வமாக முறையிடப்பட்டது.

ஆனால் மத இன வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் உண்ணக்கூடிய ஒரு உணவு என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவே தாம் அந்த விளம்பரத்தை அமைத்திருந்ததாகவும், எவரது மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கம் தமக்குக் கிடையாது என்றும் Meat and Livestock Australia நிறுவனம் தனது செயற்பாட்டை நியாயப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் குறித்த விளம்பரம் தொடர்பில் தமக்கு வந்த முறைப்பாடுகளை ஆராய்ந்த The Advertising Standards Bureau என்ற விளம்பரங்களை நெறிப்படுத்தும் வாரியம், இந்த விளம்பரம் தமது விதிமுறைகளை மீறவில்லை எனக் கூறியுள்ளது.

The Advertising Standards Bureau-இன் முடிவு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள The Hindu Council of Australia, Meat and Livestock Australia-க்கு எதிராக நாடு தழுவியரீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்
அக்டோபர் 1- அச்சத்தில் மம்தா பானர்ஜி!

ரோஹிங்கியா அகதிகளை துரத்தும் இந்தியா!

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

என் தொலைபேசியை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது:கர்நாடக முதல்வர்!
கமலை ஆம் ஆத்மிக்குள் இழுக்க முயற்சி!

எடப்பாடி குளிக்க காவிரியில் தண்ணீர் விட்ட தமிழக அரசு!

ஜெயேந்திரரை சந்திக்க: எடப்பாடி பழனிசாமி நாடகம்! video

சிறை பொருட்டல்ல: பாஜக-வை விரட்டியடிப்போம்- சிறை வாசலில் திரு…VIDEO!

தகுதி நீக்கம்- ஆறப்போட்ட நீதிமன்றம்: திணறும் எதிர்க்கட்சிகள்!

எட்டிப்பார்க்கும் ஸ்லீப்பர் செல்: ராஜன் செல்லப்பா!

தினகரனுக்காக இன்று ஆஜராகும் வழக்கறிஞர் துஷ்யந்த்தவே யார் தெரியுமா?

திருச்சியில் பிரமாண்டம் காட்டிய தினகரன்!
சிறை பொருட்டல்ல: பாஜக-வை விரட்டியடிப்போம்- சிறை வாசலில் திரு…VIDEO!

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கமல் சொன்னது என்ன?

அக்டோபர் 1- அச்சத்தில் மம்தா பானர்ஜி!

அதிமுகவின் இன்றைய நிலைக்கு காரணம் யார் தெரியுமா இங்கே க்ளிக் பண்ணுங்க…!

ட்விட்டர்: ஆர்.ஜே.பாலாஜி மூக்குடைத்த சதிஷ்!

ரோஹிங்கியா அகதிகளை துரத்தும் இந்தியா!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*