இலை மீட்பு: சசியின் ஆவணங்களுக்கும் உரிமை கோரும் பன்னீர்செல்வம்!

‘ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

மக்கள் எனக்கு குல்லா போட விரும்புகிறார்கள்” -நிஜமா கமல் சொன்னதுதாங்க…!

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

அறம் தவறிய அர்னாப் – வைரலாகும் #ArnabDidIt…!

நாங்களே இரு அணிகளாக இருந்தோம் இப்போது இணைந்து விட்டோம்.அதிமுக கட்சியும், சின்னமும் எங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது பன்னீர்செல்வம் அணி.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவி பறிப்போனதால் அதிமுகவை இரண்டாக உடைத்தார் பன்னீர்செல்வம். சசிகலா ஒரு அணியாகவும் பன்னீர்செல்வம் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என சசிகலா கவர்னருக்கு கடிதம் கொடுத்தும் அவரை ஆட்சி அழைக்க கவர்னர் அழைக்கவில்லை. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி சிறை சென்றார். அப்படி சிறை செல்வதற்கு முன்பு சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கி விட்டு சிறைக்குச் சென்றார். ஆனால் பழனிசாமி பாஜகவோடு இணைந்து அவர்களின் காட்டுதல் படி பன்னீர் அணியோடு இணைந்தார்.
ஆனால் அதிமுக இரு அணிகளாக பிரிந்த போது இரட்டை இலைக்கு உரிமை கோரியவர்கள் இருவர்தான் ஒருவர் சசிகலா, இன்னொருவர் பன்னீர்செல்வம் ஆனால் இடையில் துரோகம் செய்து பன்னீரோடு சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை இரண்டாவது அணியாக்கி சசிகலா தாக்கல் செய்த ஆவணங்களையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று தேர்தல் ஆணையத்தில் கூறியிருக்கிறது பன்னீர்செல்வம் அணி.

மோடிக்கு முழு ஆதரவளித்த ரஜினி…!கமலுக்கு மறைமுக எதிர்ப்பு!

இலை இறுதி விசாரணை:பதட்டத்தில் எடப்பாடி ஏன்?
இலை மீட்டு பயணமாக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதய குமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றனர். பகல் 12.30 மணிக்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளை நேரில் சென்று பொதுக்குழு தீர்மான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இரு அணிகளும் இணைந்து தாக்கல் செய்துள்ள கடிதத்தில் இரு அணிகளும் இணைந்து விட்டோம் பொதுக்குழு அதை அங்கீகரித்து விட்டது. ஆகவே அதிமுக எங்களுக்கே சொந்தம் இரட்டை இலையும் எங்களுக்கே சொந்தம் என்று மனுக் கொடுத்து நாங்கள் இரு அணிகளும் பிரிந்து நின்று தாக்கல் செய்த ஆவணங்களை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அதற்கு கட்சியாக நடத்திய பொதுக்குழு தீர்மானங்களை ஆதாரமாக கொடுத்திருக்கிறார்கள். சசிகலா தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களில் சசிகலாவும், அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் தினகரனும் கையெழுத்திட்டிருக்கும் நிலையில் அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் சேர்த்து தங்கள் ஆவணம் என்று வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று கோரியிருக்கிறார்கள்.

ட்விட்டர்: ஆர்.ஜே.பாலாஜி மூக்குடைத்த சதிஷ்!
ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியும், பன்னீர்செல்வமும் இணைந்த பின்னர் பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தினகரன் அணியினர் தேர்தல் கமிஷனிடம் எங்களைக் கேடாமல் இரட்டை இலை விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று மனுக் கொடுத்ததோடு.தேர்தல் கமிஷன் இறுதி விசாரணைக்கு அனுப்பிய சம்மனிலும் சசிகலா, தினகரன் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்
அக்டோபர் 1- அச்சத்தில் மம்தா பானர்ஜி!

ரோஹிங்கியா அகதிகளை துரத்தும் இந்தியா!

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

என் தொலைபேசியை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது:கர்நாடக முதல்வர்!
கமலை ஆம் ஆத்மிக்குள் இழுக்க முயற்சி!

எடப்பாடி குளிக்க காவிரியில் தண்ணீர் விட்ட தமிழக அரசு!

ஜெயேந்திரரை சந்திக்க: எடப்பாடி பழனிசாமி நாடகம்! video

சிறை பொருட்டல்ல: பாஜக-வை விரட்டியடிப்போம்- சிறை வாசலில் திரு…VIDEO!

தகுதி நீக்கம்- ஆறப்போட்ட நீதிமன்றம்: திணறும் எதிர்க்கட்சிகள்!

எட்டிப்பார்க்கும் ஸ்லீப்பர் செல்: ராஜன் செல்லப்பா!

தினகரனுக்காக இன்று ஆஜராகும் வழக்கறிஞர் துஷ்யந்த்தவே யார் தெரியுமா?

திருச்சியில் பிரமாண்டம் காட்டிய தினகரன்!
சிறை பொருட்டல்ல: பாஜக-வை விரட்டியடிப்போம்- சிறை வாசலில் திரு…VIDEO!

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கமல் சொன்னது என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*