ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையும் அனுமதிக்கவில்லை: தினகரன்!

’ஜெ’மரணம்:தீபக் வெளியிடப்போகும் தகவல்கள் இவைதான்!

‘ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

மக்கள் எனக்கு குல்லா போட விரும்புகிறார்கள்” -நிஜமா கமல் சொன்னதுதாங்க…!

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

அறம் தவறிய அர்னாப் – வைரலாகும் #ArnabDidIt…!

இலை மீட்பு: சசியின் ஆவணங்களுக்கும் உரிமை கோரும் பன்னீர்செல்வம்!

உடல் நலம் குன்றிய ஜெயலலிதா 75 நாள் சிகிச்சையின் பின்னர் இறந்தார். அவர் இறந்த பிறகு அவர் மரணம் பற்றிய சர்ச்சை அணி அணியாக சுற்றி வருகிறது.
இந்நிலையில் நேற்று மதுரை பழங்காநத்தத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசான் ஜெயலலிதா இடலி சாப்பிடுகிறார் என்று சொன்னதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். என்று சசிகலா மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தினார். இந்நிலையில் தினகரன் இன்று கர்நாடக மாநிலம் கூர்க்கில் செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“ அதிமுகவை மீட்கவே நாங்கள் போரடுவருகிறோம். ஓபிஎஸ் உடன் சேர்ந்து ஈபிஎஸ் கூட்டியது அதிமுக அம்மா அணியின் பொதுக்குழு அல்ல. உண்மையான அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை விரைவில் கூட்டுவேன்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு சிறு சலனம் கூட இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் என்றார். ஜெயலலிதா உடல் நிலை பற்றி திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது பதவிக்காகவே அவர் பேசுவதில் எது உண்மை?நோய்தொற்று ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவைக் கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.” என்று கூறியிருக்கிறார்.
இப்போது ஜெயலலிதா விவகாரத்தில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அப்பல்லோ மருத்துவர்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*