‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

’ஜெ’மரணம்:தீபக் வெளியிடப்போகும் தகவல்கள் இவைதான்!
“மக்கள் எனக்கு குல்லா போட விரும்புகிறார்கள்” -நிஜமா கமல் சொன்னதுதாங்க…!

’ஜெ’ சந்தேக மரணம்:கத்தியை ஓ.பி.எஸ் பக்கம் திருப்பிய தினகரன்!

பாதுகாப்பு அமைச்சர் துர்கை, நிதியமைச்சர் லஷ்மி – வெங்கையா நாயுடு!

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

முதலில் இதை படிங்க:-தமிழகத்தில் தற்காலிக ஆளுநரை பாஜக  விரும்புகிறது ஏன் தெரியுமா?

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலம் குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 நாள் சிகிச்சையின் பின்னர் அவர் இறந்த பிறகு அவரது மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார்கள் அதிமுகவின் ஒரு அணியினர்.
மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்:-
“ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது நாங்கள் யாரும் அவரை சந்திக்கவே இல்லை. எங்களை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் அப்போது பொய் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்காக இப்போது பகிரங்க மன்னிப்புக் கேட்கிறோம் உண்மையிலேயே அவரை யாரும் பார்க்கவில்லை”

அதிமுகவின் இன்றைய நிலைக்கு காரணம் யார் தெரியுமா இங்கே க்ளிக் பண்ணுங்க…!
“ஆனால் ஏன் அவரை பார்த்ததாக கூறினோம் என்றால் குடும்பத்தில் சண்டை வந்தால் அது பக்கத்து வீட்டுக்கு கூட தெரியக்கூடாது என்று ரகசியமாக பேசிக் கொள்வது போல நம்முடைய கட்சி ரகசியம் வெளியில் தெரியக்கூடாது என்று அப்படி எல்லோருமாக சேர்ந்து பொய் சொன்னோம்”
“அவரை பார்க்க வந்த முக்கிய பிரமுகர்கள் அனைவருமே அப்பல்லோ ரெட்டியின் அறையில் அமர்ந்து விசாரித்து விட்டு சென்றார்கள். நாங்களும் அவர்களை சுற்றி நின்று கோஷம் போட்டோம்” என்று பேசினார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது இட்லி சாப்பிட்டார் போண்டா சாப்பிட்டார் என்று அதிமுகவின் அத்தனை அமைச்சர்களுமே பொய் சொன்னார்கள். இதுதான் தமிழகத்தில் வதந்திகளை உற்பத்தி செய்தது. அதிமுக தொண்டர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.
இப்போது சசிகலாவை பழிவாங்க வேண்டும் என்று நாங்கள் அப்படி சொன்னதெல்லாம் பொய் என்கிறார்கள். நாளை என்னவெல்லாம் பேசப்போகிறார்கள்.

தொடர்புடைய முக்கிய செய்திகள்

அதிமுக இணைப்பு நாடகம்:எப்படி இருக்கும் க்ளைமாக்ஸ்…! video

இணைந்தன அதிமுக அணிகள் : எத்தனை நாளுக்கு இந்த நாடகம்?

மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஈபிஎஸ் – ஓபிஎஸ்!

ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*