மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

சுரேஷ் கோபியின் சாதிவெறி – வைரலாகும் #AdimaGopi

‘ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’

ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையும் அனுமதிக்கவில்லை: தினகரன்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

லை மீட்பு: சசியின் ஆவணங்களுக்கும் உரிமை கோரும் பன்னீர்செல்வம்!

ஜெயலலிதா இந்திய அரசியல் வானில் விடிவெள்ளி. அடிமைத் தளை உடைக்க வந்த நட்சத்திரம் என்றெல்லாம் எழுத முடியாது. அரசியலுக்கு வந்து அவர் மரணிக்கும் வரை ஒரு சர்வாதிகார தலைவராகவே இருந்தார். கட்சியிலும் ஆட்சியிலும் தான் எடுக்கும் முடிவுகளுக்கு இடைஞ்சலாக இருந்தவர்களை கிள்ளி எறிய அவர் தயங்கியதில்லை. தன் முன்னால் அனைவருமே பணிந்து நடக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தார்.
அதனால்தான் அவருக்கு யாராலும் அசைக்க முடியாத தலைவர் என்ற பிம்பம் கிடைத்தது. ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாகியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார். என எத்தனையோ சவால்களை தன் வாழ்வில் சந்தித்து 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தார்.
அரசியல் தலைவர்கள் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் மறைந்து விட்டார் என்றால் யாரும் இகழ்வதில்லை. பழிப்பதில்லை அரசியல் விமர்சனங்களை மட்டும் தேவை கருதி முன் வைப்பார்கள். ஆனால் ஜெயலலிதாவை அவரது மரணத்திற்குப் பின்னர் நகைச்சுவையாக கேலி கிண்டல் செய்யும் அளவுக்கு அதிமுகவினரே கொண்டு சென்று விட்டார்கள். அவர் வாழும் வரை அவருக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கக் கூட அஞ்சியவர்கள் அவர் மறைந்த பிறகு ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள்.
அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்ட போது அம்மா இட்லி சாப்பிடுகிறார், பொங்கல் சாப்பிடுகிறார் என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்ட மக்கள் அதை நம்பவில்லை. சந்தேகம் கொண்டார்கள். ஜெயலலிதா உடல் நிலை தொடர்பாக நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா உடல் நிலை தொடர்பாக கேள்வி எழுப்பியர்களை வதந்தி எனும் பெயரில் கைது செய்தது அப்போதைய பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு.
ஆனால் இப்போது “அம்மா இட்லி சாப்பிடுவதாக நாங்கள் சொன்னதெல்லாம்” பொய் என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதே சீனிவாசன் போன மார்ச் மாதம் “அம்மாவுக்கு க்ளுக்கோஸ் ஏறுவதை நான் பார்த்தேன்” என்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மக்கள் எனக்கு குல்லா போட விரும்புகிறார்கள்” -நிஜமா கமல் சொன்னதுதாங்க…!

அறம் தவறிய அர்னாப் – வைரலாகும் #ArnabDidIt…!
சசிகலாவை பழிவாங்க ஜெயலலிதாவையும் அவரது மரணத்தையும் துருப்புச் சீட்டாக்கி இந்த விளையாட்டை முதன் முதலில் துவங்கி வைத்தவரே பன்னீர்செல்வம்தான்.பின்னர் இப்போது இந்த கோமாளித்தனமான கூத்தை பன்னீரும், எடப்பாடி பழனிசாமியும் பிற அமைச்சர்களும் இணைந்து முன்னெடுக்கிறார்கள்.
விளைவு ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுமாக எழுதப்படுகிறது. இதற்கு முழு காரணமும் ஆளும் அதிமுக அரசும் அதன் அமைச்சர்களும்தான்.இப்போது ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையே அனுமதிக்க வில்லை என்கிறார் தினகரன். அப்படி என்றால் ஜெயலலிதா தொடர்பாக பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் அப்பல்லோ மருத்துவமனையும், டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்களும்தான்.
இனியேனும் அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதா உடல் நிலையில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பாக மக்களை சந்தித்து விளக்கம் அளிக்குமா?

ட்விட்டர்: ஆர்.ஜே.பாலாஜி மூக்குடைத்த சதிஷ்!

ரோஹிங்கியா அகதிகளை துரத்தும் இந்தியா!

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கமல் சொன்னது என்ன?

உடைந்து போன சசிகலா :யாரையும் சந்திக்க விரும்பவில்லை!

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

என் தொலைபேசியை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது:கர்நாடக முதல்வர்!
கமலை ஆம் ஆத்மிக்குள் இழுக்க முயற்சி!

எடப்பாடி குளிக்க காவிரியில் தண்ணீர் விட்ட தமிழக அரசு!

ஜெயேந்திரரை சந்திக்க: எடப்பாடி பழனிசாமி நாடகம்! video

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*