மெர்சல்: விஜய்யுடன் நடித்தது பற்றி காஜல்

‘ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவுள்ள ‘மெர்சல்’ திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு சிலரது ஜோடிப் பொருத்தம் திரையில் பார்க்க மிக அழகாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் தொடர்ந்து பணிபுரிவார்கள், விஜய்யுடன் த்ரிஷா மற்றும் அசின் ஆகியோர் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து நடித்து வந்ததை நாம் அறிவோம். இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் பாக்ஸ்-ஆபிஸ் வசூலில் தோற்றது கிடையாது. இந்த வரிசையில் விஜய்யுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் காஜல் அகர்வால். இவர்கள் இருவரும் பணிபுரியும் மூன்றாவது திரைப்படம் ‘மெர்சல்’. இதற்கு முன்பு இவர்கள் நடித்த ‘ஜில்லா’ மற்றும் ‘துப்பாக்கி’ ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ்-ஆபிஸில் வசூலை வாரிக் குவித்தது.

[இதையும் வாசிங்க: மெர்சல் பெயரை பயன்படுத்த விஜய்க்கு தடை!]

இந்நிலையில் மூன்றாவது முறையாக விஜய்யுடன் நடிக்கும் காஜல், விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் அவர், “விஜய்யுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் நடிப்பது அலாதியான அனுபவம். ஆனால் அவருடன் நடனம் ஆடுவதற்கு நான் மிகவும் சிரமப்படுவேன். அவர் கஷ்டமான நடன அசைவுகளை மிக எளிதாக செய்வார். அதனால் நான் நடனமாட அதிக ஒத்திகை பார்த்துக் கொள்வேன், அப்போதுதான் அவரோடு சொதப்பாமல் ஆட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி: படப்பிடிப்பு அறிவிப்பு?

கோகோ ரெக்யூம்: விஜய் ஒரு சிறந்த மேஜிக் கலைஞர்!

ஜல்லிக்கட்டு: தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*