‘ஜெ’ மரணம்:விசாரணை இட்லி பற்றியா?

Tamilnadu Chief Minister Jayalalitha at Tamilnadu House in New Delhi on 13/06/2011. Photo by Shailendra Pandey/Tehelka

’ஜெ’மரணம்:தீபக் வெளியிடப்போகும் தகவல்கள் இவைதான்!

‘ஜெ’ மரணம்: பன்னீர்செல்வம் பேசியது என்ன?-VIDEO

’ஜெ’ மரணம்: பன்னீர் அவசரமாக பதவியேற்றது ஏன்?

‘ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’

சுரேஷ் கோபியின் சாதிவெறி – வைரலாகும் #AdimaGopi

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

“அம்மா இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் கும்பலாக பொய் சொன்னோம், அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று” மதுரை பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச கொஞ்ச நாள் அடங்கியிருந்த ஜெயலலிதா மரண சர்ச்சை மறுபடியும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இது விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் இது பற்றி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் நியாயமான விசாரணை நடைபெறும் எனவே தேவையில்லாமல் யாரும் கருத்து கூற வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையும் அனுமதிக்கவில்லை: தினகரன்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

லை மீட்பு: சசியின் ஆவணங்களுக்கும் உரிமை கோரும் பன்னீர்செல்வம்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரினார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்.இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த விவாதங்களுக்கு முழு முதல் காரணமும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தான். தினகரன், சசிகலாவின் கேரக்டரை பொது வெளியில் சிதைக்க இப்படி ஒரு குற்றச்சாட்டை பொது மக்கள் முன்னிலையில் சொல்ல சொன்னதே எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள். அதிமுகவில் நிலவும் பதவி போட்டிக்கும் கட்சி மோதல்களுக்கும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஜெயலலிதா மரணத்தை ஊறுகாய் போல பயன்படுத்துகிறார்கள்.
உண்மையில் மாநில அரசு அமைத்திருக்கும் விசாரணை ஆணையம் எது பற்றி விசாரிக்கப் போகிறது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா என்பது பற்றியா அல்லது உண்மையிலேயே அவர் இட்லி சாப்பிட்டாரா இல்லையா என்பது பற்றியா அதிமுகவினரின் பேச்சுகளில் இருந்து மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களில் இதுவும் ஒன்று.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*