
ஆட்சி கலைப்பு? போலீசை உஷார் படுத்திய டிஜிபி…!
“ரஜினியுடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறேன் ” -கமல்ஹாசன்
அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?
‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?
ஜெ மரணம் :சிக்கலில் ஓபிஎஸ்-இபிஎஸ்!
நடராஜன் கவலைக்கிடம்:உறுதி செய்தது குளோபல் மருத்துவமனை!
’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!
மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!
ஜெ’ மரணம்: பன்னீர்செல்வம் பேசியது என்ன?-VIDEO
’ஜெ’ மரணம்: பன்னீர் அவசரமாக பதவியேற்றது ஏன்?
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் சர்ச்சைகள் உருவாகி உள்ளன. இதற்கு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு காரணமான நிலையில் 72 நாட்களும் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சுமார் 60 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன். அவர் இந்த நேரத்தில் மிக முக்கியமான நேர்காணல் ஒன்றை தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கியிருக்கிறார்.
அப்பல்லோ அட்மிட் முதல் மரணம் வரை

2016 செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.ஜெயலலிதாவை அட்மிட் செய்த ஆவணங்களில் கார்டியன் என்று கையெழுத்திட்டது சசிகலாதான். ஆமாம் சசிகலாவின் ஓட்டுநர் சான்று, ஆதார் அட்டை, வாக்குச்சீட்டு என அத்தனை அரசு சான்றிதழ்களிலும் போய்ஸ் இல்லமே அவரது வசிப்பிடமாக பதியப்பட்டது. இவை அனைத்தும் தன்னிச்சையாக செய்யப்பட்டவை அல்ல. ஆதார் அட்டை ஜெயலலிதா, சசிகலா இருவருமே ஒரே நேரத்தில் வாங்கினார்கள். அது போல வாக்காளார் அடையாள அட்டையும் இருவரும் ஒரே நேரத்தில் அப்டேட் செய்து பெற்றுக் கொண்டதும் உண்டு எனும் நிலையில் சசிகலா கார்டியன் கையெழுத்து போட்டது யாருக்கும் உறுத்தவில்லை,
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே தொலைபேசி செய்து விசாரித்த நபர் ஜெயலலிதாவின் அந்தரங்க உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம். அவரைத் தாண்டி போயஸ் கார்டனில் ஒரு ஈ கூட நுழைய முடியாது என்னும் நிலையில். தனது அத்தனை சுகவீனமுற்று அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்ததும் அப்பல்லோ விரைந்தார் தீபக். ஆனால் அங்கு காவலுக்கு நின்ற அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பினார்கள் “நான் சி.எம்மோட அண்ணன் மகன்” என்று சொன்ன போதும். “உங்களை அடையாளம் காண முடியவில்லை. இப்போது போய் விட்டு நாளை வாருங்கள்” என்று அனுப்பி வைக்கிறார்கள். அவர் போய் பூங்குன்றனைப் பார்க்க பூங்குன்றன் தீபக்கை அழைத்துக் கொண்டு மறு நாள் அப்பல்லோ சென்றார். அன்று முதல் தீபக் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோவின் இரண்டாவது தளத்திலேயே இருந்தார். ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்குள் அப்பல்லோ தாதியர்களைத் தவிற வேறு எவருக்கும் அனுமதியில்லை.
அவ்வப்போது சசிகலா மட்டும் மருத்துவர்களின் அனுமதியோடு பார்த்து விட்டு வந்தார்.ஜெயலலிதா சிகிச்சைக்குச் சேர்ந்த சில நாட்களில் நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படும் என்பதை மருத்துவர்கள் சொல்ல அப்பல்லோவின் மூன்றாவது மாடியை சசிகலாவின் குடும்பம் எடுத்துக் கொண்டார்கள்.இரண்டாவது மாடியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்கு வெளியே இருந்த இருக்கையில் பன்னீர்செல்வமும் தம்பிதுறையும் அமர்ந்திருப்பார்கள். இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டாவது மாடிக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அரசுத் தரப்பில் இருந்தோ பெரிய கட்சிகளில் இருந்தோ யார் வந்தாலும் அவர்கள் பார்ப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வது மருத்துவமனைதானே தவிற சசிகலா அல்ல. அந்த வகையில் சுயநினைவற்று கடுமையான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை சந்திக்க எவரையும் மருத்துவ நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
கவர்னர் வந்து கண்ணாடி வழியே ஜெயலலிதாவை பார்த்தார். அப்போது ஜெயலலிதா சுயநினைவின்றி இருந்தார். தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதாவின் சம்மதத்தோடு பன்னீர்செல்வம் வழி நடத்திச் செல்வார் என்று சொன்ன போதும் ஜெயலலிதாவுக்கு சுய நினைவு திரும்பவில்லை.
ஜெயலலிதா கைரேகையிலும் மோசடி!
நவம்பர் முதல் வாரத்தில் ஜெயலலிதா உடல் நிலை பற்றி கருத்து வெளியிட்ட அப்பல்லோ நிறுவனர் பிரதாப்ரெட்டி “முதல்வர் பூரண குணமடைந்து விட்டார். எப்போது வீடு திரும்புவது என்று அவர் முடிவு செய்வார்” என்றார். அதாவது நவம்பர் முதல் வாரத்தில் ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியது.ஆனால் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 2016 அக்டோபர் 28 -ஆம் தேதி தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள்.அவர்களுக்கான ஒப்புதலாக ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை பதியப்பட்டிருந்தது. விரல் ரேகை பதியப்பட்ட தேதியும் 28-ஆம் தேதியாக இருந்தது. ஆக சுயநினைவின்றி இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்று அதிமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியில் அவர் இறந்த பின்னர் இப்போது பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் சசிகலா என்பது போல பேசி வருகிறார்கள்.
மொத்தமாக ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது தமிழகத்தில் அதிகாரம் பொருந்திய சுகாதாரத்துறை, நீதித்துறையில் செல்வாக்கோடு இருக்கும் அதிகாரி, என முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஐந்து பேர் ஜெயலலிதாவுடன் ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அப்போது மட்டுமே அவர் நினைவோடு இருந்தார்.
ஆனால் என்ன காரணத்தாலோ அந்த அதிகாரிகள் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். ஜெயலிதா மரணம் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில் தீபக்கின் இன்றைய பேட்டி பல உண்மைகளை போட்டு உடைக்கும் என்று தெரிகிறது.பன்னீர்செல்வம் அமைச்சரவையை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று எடுத்த முடிவு யாருடையது. ஜெயலலிதா மரணம் அடைந்த இரவே அவசரமாக பன்னீர்செல்வத்தை எந்த அடிப்படையில் முதல்வராக்கினார்கள். அதன் பின்னால் உள்ள சக்திகள் யார் என்ற கேள்விகளுக்கு இனி வருங்காலங்களில் விடை கிடைக்கும்!
தொடர்புடைய செய்திகள்
நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!
நடராஜன் உடல் நிலை: பரோலில் வர விரும்பாத சசி…!பின்னணி தகவல்கள்!
Leave a Reply