தனுஷ் எதிரியான டொவினோ தாமஸ்

‘மாரி-2’ படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உறுதி செய்யப்பட்டுள்ளார். மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் டொவினோ, தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தரங்கம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

[இதையும் வாசிங்க: மாரி 2: தெலுங்குக்கு செல்கிறார் தனுஷ்]

2015 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாரி’. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது. அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார் பாலாஜி. இதில் வில்லனாக நடிக்க டொவினோ தாமஸை தேர்ந்தெடுத்தது பற்றி அவர், “இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரம் தனித்துவம் வாய்ந்தது. அதில் நடிக்க டொவினோ போன்று தீவிரமாக நடிப்பை நேசிப்பவர்களால் மட்டுமே முடியும். நான் கதையை சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது, உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்” என தெரிவித்துள்ளார்.

‘மாரி’ படத்தின் முதல் பாகத்துக்கு அனிருத் இசையமைத்தார். இதற்கு யார் இசையமைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதேபோல் கதாநாயகி மற்றும் பிற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

மூன்று மொழிகளில் தனுஷ்!

6 வருடங்களுக்குப் பிறகு தனுஷ்-செல்வா கூட்டணி

மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*