விக்ரம் உடன் பணிபுரியவில்லை: ராம்

‘தரமணி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம், விக்ரமுடன் பணிபுரிய உள்ளார் என செய்திகள் வெளியாகின. அது உண்மையில்லை என ராம் மறுத்துள்ளார். அவர் தற்போது ‘பேரன்பு’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

[இதையும் வாசிங்க: தமிழக அரசு பதவி விலக வேண்டும்: கமல்ஹாசன்]

இதுகுறித்து ராம், “விக்ரம் பற்றிய வதந்தி எப்படி கிளம்பியது என்று தெரியவில்லை. நான் அவருடன் பணிபுரியவில்லை, ‘பேரன்பு’ படத்தின் போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

ஸ்கெட்ச் போட வில்லன்கள் தேவை: விக்ரம்

மேலும் அவர் ‘பேரன்பு’ பற்றி, “இது அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான உறவு பற்றி பேசும் உணர்வுப்பூர்வமான கதை. பாடல்கள் உருவாக்கப் பணியில் யுவன் சங்கர் ராஜா இருக்கிறார்” என்று கூறினார். பேரன்பு, மம்மூட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம்.

நடிகர் விக்ரம் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் வேலைகளில் உள்ளார்.

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்: விக்ரம் ஸ்பெஷல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*