விக்ரம் வேதா: ஷாருக்கான் தயாரிப்பில் உருவாகிறதா?

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை ஷாருக்கான் வாங்கி தயாரிக்கிறார் என செய்திகள் வெளியானது. இதற்கு அதன் தயாரிப்பாளர் சசிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

[சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் கூட்டணி: மணிரத்னம்]

இதுகுறித்து அவர், “ ‘விக்ரம் வேதா’ படத்தின் உரிமையை நாங்கள் எந்த மொழிக்கும் விற்கவில்லை. ஹிந்தியிலும் நாங்களே தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதுபற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார். இதன் கன்னட ரீமேக்கில் நடிக்க சுதீப் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ரானா தகுபதி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் ‘விக்ரம் வேதா’ அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி: ஒரு தந்தையாக தன் குழந்தைக்கு கூறும் அறிவுரை

ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

அறம் தவறிய அர்னாப் – வைரலாகும் #ArnabDidIt…!

ட்விட்டர்: ஆர்.ஜே.பாலாஜி மூக்குடைத்த சதிஷ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*