ஜெ மரணம் :சிக்கலில் ஓபிஎஸ்-இபிஎஸ்!

“ரஜினியுடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறேன் ” -கமல்ஹாசன்

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?
’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

ஜெ’ மரணம்: பன்னீர்செல்வம் பேசியது என்ன?-VIDEO

’ஜெ’ மரணம்: பன்னீர் அவசரமாக பதவியேற்றது ஏன்?

நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!
ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்பதுதான் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் தமிழக மக்களிடம் உருவாக்க விரும்பும் சந்தேகம். அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி சசிகலா தினகரன் ஆகியோரை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள் இருவரும்.
துவக்கத்தில் “ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை” என்று சொல்லி வந்த ஒ,பன்னீர்செல்வம் ஒரு மாதம் கழித்து மர்மம் இருப்பதாக கூறியதோடு நீதி கேட்டு உண்ணாவிரதமும் இருந்தார். இப்போது திண்டுக்கல் சீனிவாசனை இப்படி ஒரு குண்டை வீசச் சொன்னதே எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள்.
ஆனால் தினகரனும், தீபக்கும் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் அதிர்ச்சி தகவல்கள் சசிகலாவுக்கு அப்பால் ஜெயலலிதாவின் சிகிச்சை அவரது சூழலை ஒரு அரசியல் சக்தி கையாண்டிருப்பது தெரியவருகிறது.
இந்த சந்தேகங்கள் அடுக்கடுக்காய் எழும் நிலையில் சசிகலாவின் ஆதரவாளராக இருந்து இப்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் இணைந்துள்ள அமைச்சர் மணியன் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அதில் “ஜெயலலிதாவின் உயிருக்கு என்ன நடந்தது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும், அவரது மரணத்தில் சர்ச்சை இருக்கிறதே தவிற அது உண்மை கிடையாது.புரட்சித் தலைவி ஜெயலலிதா ஒரு முதல்-அமைச்சர். சிகிச்சை பெற்ற இடம் அப்பல்லோ மருத்துவமனை. அந்த மருத்துவமனை டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், வெளிநாட்டு டாக்டர்கள் தலா 8 மணி நேரம் என 24 மணி நேரமும் பொறுப்பாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். அவரை பார்த்துக் கொண்டனர். சிகிச்சை அளித்தனர்.
இதில் சந்தேகம் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அணு அளவு கூட இல்லை. திண்டுக்கல் சீனிவாசன் சொல்வது அவரஹ்டு தனிப்பட்ட கருத்து. அவர் வேண்டுமென்றால் சசிகலாவை சந்தேகப்படலாம். ஆனால் நான் சந்தேகப்படவில்லை. சசிகலா மீது எனக்கிருந்த வருத்தம் தினகரனை அவர் துணை பொதுச்செயலாளர் ஆக்கியதுதான். அது போல ஆர்.கே.நகர் தேர்தலில் அவரை போட்டியிட செய்ததும்தான் வருத்தம். தினகரன் தன்னை சூப்பர் எம்.ஜி.ஆர். என்று நினைத்துக் கொண்டு சர்வாதிகாரமாக செயல்படுகிறார். சசிகலா பொதுச்செயலாளர் பணியை செய்ய முடியாமல் இருப்பதால்தான் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.” என்றார்.
ஜெயலலிதா மரணத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கே முழுமையாக கருத்தொற்றுமை இல்லை. ஆனால் அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த போது சசிகலாவையும் மீறிய செல்வாக்கான சக்தி ஒன்று தலையிட்டு அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுத்திருப்பது தெரியவருகிறது. இப்போதைக்கு ஜெயலலிதா மரண சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரவே ஆறுமுகச்சாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்திருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

’ஜெ’ நைட்டியில் டிவி பார்த்த விடியோ உள்ளது:தினகரன்

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

நடராஜன் உடல் நிலை: பரோலில் வர விரும்பாத சசி…!பின்னணி தகவல்கள்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*