ஜெயலலிதாவை கொலை செய்தவர்கள் யார்?

டி.அருள் எழிலன்

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க ஜெயலலிதா பயன்படுத்தப்படுவார்…!

‘ஜெ’ சுவாசக்கருவி அகற்றப்பட்டது பன்னீர்செல்வத்துக்கு தெரியும்:ஆர்.டி.ஐ தகவல்!

ஆட்சி கலைப்பு? போலீசை உஷார் படுத்திய டிஜிபி…!

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?

ரஜினியுடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறேன் ” -கமல்ஹாசன்

தன் மரணத்திற்கு பிறகு இப்படி ஒரு இழுக்கும் அவமரியாதையும் தனக்கு ஏற்படும் என்பதை ஜெயலலிதா கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார். அப்படி ஒரு இழுக்கையும் அவமானத்தையும் அவருக்கு தேடிக்கொடுத்து விட்டார்கள் இபிஎஸ்-ஒபிஎஸ் குழுவினர். தனது 68-வது வயதில் அவர் இறந்ததும் இறந்த விதமும் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மைதான். காரணம் அவர் தன்னைச் சுற்றி பின்னிக் கொண்ட பிம்பச்சிறை அப்படி. யாருக்கும் அஞ்சாதவர் யாருக்கும் பணிந்து போகதாவர் எவரிடத்தும் தாழ்ந்து செல்லாதாவர் என்ற இமேஜ் அவருக்கு இருந்தது.
அவர் உயிரோடு இருந்த போது எளிதில் அவரை யாரும் பார்த்து விட முடியாது. முதல்வராக இருந்த போதும் பதவியில் இல்லாத போதும் கூட அப்படித்தான். எப்போதும் பளிச்சென்ற தோற்றத்துடன் வெளியில் வரும் ஜெயலலிதா நிலைகுலைந்து சிகிச்சையில் இருக்கும் தன்னை பிறர் குறிப்பாக பிற ஆண்கள் பார்ப்பதை நிச்சயம் விரும்பி இருக்க மாட்டார். அது அவரது இயல்பு. இன்று “அம்மாவை நான் பார்க்கவில்லை நான் பார்க்கவில்லை” என்று சொல்கிற அதிமுக அமைச்சர்கள் எல்லாம் அவர் சிகிச்சையில் சேர்வதற்கு முன்னால் அன்றாடம் அல்லது மாதத்திற்கு ஒரு முறையேனும் ஜெயலலிதாவை பார்த்திருப்பார்களா?
சட்டமன்ற நடவடிக்கைகளின் போதும், அமைச்சரவைக் கூட்டத்தின் போதும், கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தின் போதும் கூட்டத்தோடு கூட்டமாகவே அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்க்க முடியும்.நிலமை இப்படி இருக்க இவர்கள் “நான் அம்மாவை பார்க்கவில்லை” என்று சொல்வதன் நோக்கம்தான் என்ன?

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது இவர்கள் ஆசை?
2016 -ஆம் செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 72 நாட்கள் சிகிச்சையில் இருந்து இறந்தார். அதற்கு முன்னர் ஒரு வருடமாக அவர் உடல் நிலை இயல்பாக இல்லை. மரணிப்பதற்கு முன்பு நடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் அவரால் எழுந்தி நிற்க முடியவில்லை. அதனால் அமர்ந்த படி பேசுவதற்கான மேஜைதான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
அப்போது அவர் உடல் நிலை தொடர்பாக ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதின. அவர் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளியாகின. பின்னர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது அவரை பார்க்க வந்த முதல்வர் ஜெயலலிதாவால் நடக்க இயலவில்லை என்பதை ஒரு விடியோ உணர்த்தியது.
பின்னர் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பொது இடங்களில் பங்கேற்பதை அவர் குறைத்துக் கொண்டார். விடியோ கான்பிரன்சிங் மூலமே அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
நிற்க தன் உடல் நிலை பற்றிய அவரே மனம் திறந்து பேசியிருக்கிறார் “என் குடும்பத்தில் பெரும்பாலும் 60 வயதை கடந்தவர்கள் இல்லை. எனக்கு எஞ்சியிருக்கும் காலம் போனஸ்தான் என்கிறார்” மரபார்ந்த உடல் உபாதைகள் அவருக்கு இருந்து மிக மோசமான நிலையில் மயங்கி சுய நினைவின்றிதான் அவர் அப்பல்லோவில் சேர்ந்தார். மீள முடியாமல் இறந்தார்.
ஆனால் அப்போது யாரும் அவரது மரணத்தில் சந்தேகம் கிளப்பவில்லை. பன்னீர்செல்வம் எப்போது முதல்வர் பதவியை இழக்கிறாரோ அப்போதே முதன் முதலாக அரசுத் தரப்பில் இருந்தும் அதிமுக தரப்பில் இருந்தும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பப்பட்டது.மார்ச் -8-ஆம் தேதி சிபிஐ விசாரணை கோரி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருந்தார் பன்னீர்செல்வம்.அதற்கு முன்னர் பிப்ரவரி 7-ஆம் தேதி பதவியிழந்த பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த போது கூட ஜெயலலிதா மரணத்தில் அவருக்கு சந்தேகம் இல்லை. ஒரு மாத இடைவெளியில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்கிறார்.

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

’ஜெ’ மரணம்: பன்னீர் அவசரமாக பதவியேற்றது ஏன்?

நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!
அவ்வப்போது பன்னீர்செல்வம் அணி இதை பேசி வந்த நிலையில்தான் தான் இட்லி விவகாரத்தை வெடிக்க வைத்தார் திண்டுக்கல் சீனிவாசன். அதன் பின்னர் வரிசையாக அதிமுக அமைச்சர்கள் “அம்மாவை பார்த்தோம்” “அம்மாவை பார்க்கவில்லை” என்று வரிசையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நீட் தோல்வி உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழகத்தின் மீது அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது. இந்த அரசு மீது மக்கள் வெறுப்பில் இருக்கும் நிலையில் இவர்கள் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பி அந்த பழியை சசிகலா மீது போட்டு அவர்களை மொத்தமாக அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அது அத்தனை எளிதில் நடக்கக் கூடியதல்ல. ஜெயலலிதா அதிமுகவின் ஒரு பிரிவினர் விரும்புவது போல கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றால் அதில் முதன் முதலாக விசாரிக்கப்பட வேண்டியவர் பன்னீர்செல்வம். அவரே அரசை வழி நடத்திச் சென்றார். அவர் பதவியேற்றதில்தான் மர்மம் உள்ளாதே தவிற இவர்கள் பேசுவது போல ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை.
ஜெயலலிதா சுகவீனமுற்ற நிலையை பயன்படுத்தி பன்னீர்செல்வம் தமிழக அரசை கைப்பற்றினாரா என்பதும் கூட ஒரு மர்மமான கேள்விதான். அதன் பின்னால் இருந்தவர்கள் யார் என்கிற கேள்விகளும் உள்ளன?
எம்.ஜி.ஆருக்குப் பிறகு வலுவான தலைவர்கள் யாரும் அதிமுகவில் உருவாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த ஜெயலலிதா அதிமுகவின் பலமான அடித்தட்டு தொண்டர்களை அமைச்சர்களாக்கினார். அப்படி வந்தவர்கள்தான் ஒபிஎஸ்-இபிஎஸ் என அனைவருமே…! நிற்க, யாராலும் நெருங்கமுடியாமல் தன்னை கம்பீரமாக கட்டமைத்துக் கொண்ட ஜெயலலிதாவின் பிம்பத்தை கொலை செய்தவர்கள் அதிமுகவில் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இவர்களே வரலாறு இதை பதிவு செய்து கொண்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*