’ஜெ’ கைரேகை வில்லங்கத்தின் துவக்கம்…!

ஜெயலலிதாவை கொலை செய்தவர்கள் யார்?

‘ஜெ’ சுவாசக்கருவி அகற்றப்பட்டது பன்னீர்செல்வத்துக்கு தெரியும்:ஆர்.டி.ஐ தகவல்!

ஆட்சி கலைப்பு? போலீசை உஷார் படுத்திய டிஜிபி…!

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?

ரஜினியுடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறேன் ” -கமல்ஹாசன்

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்த போது தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல்கள் ரத்தானது . திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இறந்தால் அந்த தொகுதிக்கு மறு தேர்தல் வந்தது . இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களின் ‘பார்ம் பி’ யில் ஜெயலலிதாவின் இடது பெரு விரல் ரேகை பதியப்பட்டது. அப்போதே சர்ச்சைக்குள்ளானது. தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் அவர்களும் கண்டு கொள்ளவில்லை.திமுக வெட்பாளராக போட்டியிட்டு தோற்ற டாக்டர் சரவணன் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கைரேகையின் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்றும், அதிமுக வேட்பாளர் போஸ் அவர்களின் வெற்றி செல்லாது என அறிவிக்கவும் கோரி மனு தாக்கல் செய்த நிலையில்,
விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி, திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி விளக்கமளிக்க உத்தரவிட்டது. இதன்படி லக்கானி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இன்று, திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிமுக வேட்பாளரின் பி பார்ம் ஏற்று கொண்டதாக கூறினார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் அக்டோபர் 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
2016 அக்டோபர் 28-ஆம் தேதி கைரேகை பதியப்பட்டிருக்கும் நிலையில் அந்த நாளில் ஜெயலலிதா சுய நினைவோடு இருந்தாரா என்ற சந்தேக வளையங்கள் சுற்றும் நிலையில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவின் உடல் நிலை விவாதத்திற்குள்ளாகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*