’ஜெ’மரணம் சசிகலா குடும்பத்தை மட்டும் விசாரிக்க திட்டம்…!

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க ஜெயலலிதா பயன்படுத்தப்படுவார்…!
’ஜெ’ மருத்துவ அறிக்கை:சசிகலவை சிக்க வைக்க சதி!

ஜெயலலிதாவை கொலை செய்தவர்கள் யார்?

‘ஜெ’ சுவாசக்கருவி அகற்றப்பட்டது பன்னீர்செல்வத்துக்கு தெரியும்:ஆர்.டி.ஐ தகவல்!

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

ரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்தை பழிவாங்கவே தமிழக அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் பயன்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுக பிளவு பட்டது. பன்னீர்செல்வம் பதவி இழந்ததாலும், எடப்பாடி பழனிசாமி பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல் நிலை தொடர்பான அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், மரணத்திற்கு முந்தைய நிலைகள் தொடர்பாக அதாவது சிகிச்சையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் போயஸ் இல்லத்தில் அவரது உடல் நிலை தொடர்பாக கேள்வி எழுப்பினால்தான் சசிகலா மட்டும் சிக்குவார் என்பதால். ஜெயலலிதா மரணத்தை அப்பல்லோவுக்கு முன்னர் அப்பல்லோவுக்கு பின்னர் என இரண்டாக பிரித்து அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நிலை தொடர்பாக சசிகலா மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தொடர்பான அரசின் அறிவிப்பில்:-
“ தமிழக அரசின் உத்தரவின் பேரிலும் கவர்னரின் உத்தரவின் பேரிலும் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“ 22-06-2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான சூழல் ஏன் எழுந்தது என்பது பற்றியும் சிகிச்சை பற்றியும் விசாரிக்க ஆணையத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது அரசு”
இந்த அறிவிப்பின் முதல் குறி போயஸ் இல்லத்தில் ஜெயலலிதாவோடு வாழ்ந்த சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான்.
ஆனால் அதே நேரம் அப்பல்லோவில் சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவர்களை விசாரிக்கும் உத்தரவுகள் எதுவும் இந்த அறிவிப்பில் இல்லை என்று தெரிகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்ற வதந்தியை பரப்பியவர்களே இப்போது அதற்கான எல்லைக்கோட்டை தீர்மானிக்கிறார்கள். இந்த விசாரணை வரம்புக்குள் கவர்னரோ, மத்திய அரசோ, எய்ம்ஸ் மருத்துவர்களோ வரவில்லை. முழுக்க முழுக்க சசிகலாவை மட்டுமே குறிவைத்து இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*