’ஜெ’ மருத்துவ அறிக்கை:சசிகலவை சிக்க வைக்க சதி!

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க ஜெயலலிதா பயன்படுத்தப்படுவார்…!

ஜெயலலிதாவை கொலை செய்தவர்கள் யார்?

‘ஜெ’ சுவாசக்கருவி அகற்றப்பட்டது பன்னீர்செல்வத்துக்கு தெரியும்:ஆர்.டி.ஐ தகவல்!

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

ரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!
2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி சுயநினைவற்ற நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 72 நாள் சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த 72 நாள் சிகிச்சை தொடர்பாக பல் வேறு சர்ச்சைகள் உருவானது.இப்படி சர்ச்சைகள் உருவகலாம் என்பதை உணர்ந்த அப்பல்லோ நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் வழங்கியுள்ளது.
அதில் நோயாளியின் முதல் பதிவு அறிக்கையும் உள்ளது. அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல் நிலை தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
செப்டம்பர் 22-ஆம் தேதி போயஸ்கார்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு போயஸ் இல்லம் சென்ற போது அசைவற்று சுயநினைவற்று இருந்ததாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது. படுக்கையில் இருந்து அசைவற்ற நிலையில் அப்பல்லோ கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவை சோதித்த மருத்துவர்கள் எழுதியிருக்கும் ரிப்போர்ட்டில்.
அவருக்கு 140 அளவில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு 508 என்று அபாயகரமான அளவில் இருந்துள்ளது. இதயத்துடிப்பு 72 என்று இருக்க வேண்டும் ஆனால் 82 ஆக இருந்துள்ளது. உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு 45% மட்டுமே இருந்ததாக முதல் பதிவு குறிப்பிடுகிறது. நிமோனியா காய்ச்சல் இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளியிட்ட அறிக்கையில், காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சைஅளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*