விஜய்க்கு போட்டியாக நயன்தாரா?

ஜெயலலிதாவை கொலை செய்தவர்கள் யார்?

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியாகவுள்ள படம் ‘அறம்’. நயன்தாரா, மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆயுத பூஜை அன்று வெளியாக இருந்த ‘அறம்’, தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று வெளியாக இருந்த ‘ஹர ஹர மகா தேவகி’ உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்கள், விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ வெளியாகவுள்ளதால் போட்டிகளின்றி விலகியது. இதற்கு முக்கியமான காரணம், பெரும்பான்மையான திரையரங்குகளை ‘மெர்சல்’ ஆக்கிரமித்துவிடும். எனினும் ‘அறம்’ திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர் அதன் படக்குழுவினர். ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு நயன்தாராவின் மார்க்கெட் அதிகமாகியுள்ளது. ‘மெர்சல்’ வெளியாகும்போது போட்டியிட்டு தன் படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லாமல் தப்பிக்கும் அளவு நயன்தாராவின் ரசிகர் கூட்டம் பெருகிவிட்டனர். எனவே தீபாவளி ரேசில் விஜய்க்கு எதிராக களமிறங்குகிறார் நயன்தாரா.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*