சசிகலாவை ஒதுக்குவது அனைவரின் விருப்பமா? -அமைச்சர் பதில்!

 இதை முதல்ல படிங்க:-பன்னீருக்காக பலி கொடுக்கப்பட்ட ஜெயக்குமார்!
சினிமா பாணியில் தாயை தாக்கி சிறுமியை கடத்தியவர்கள்…!VIDEO

“இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கீங்க” கோரக்பூர் மரணங்கள் பற்றி யோகி ஆதித்தியநாத்

நூற்றுக்கணக்கானோர் பலி:டெங்குவா மர்மக் காய்ச்சலா?
அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலாவை அதிமுகவை விட்டு விலக்கி வைப்பது அனைவருடைய விருப்பம் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்:-
“ மருத்துமனையில் ஜெயலலிதாவை பார்த்தேனா என்பதை விசாரணை ஆணையத்தில்தான் தெரிவிப்பேன். ஜெயலலிதாவை யார் யார் பார்த்தார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும். விசாரணை ஆணையத்திற்கு அழைக்கப்பட்டால் அவர்களிடம் பதில் அளிப்போம். சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தது அனைவரது விருப்பம் தான்” என்றார்.

இதை வாசிங்க:- அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!
ஆனால் அதிமுகவில் எடப்பாடி அணியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களோ சசிகலாவை விலக்கி வைப்பது சரியில்லை என்றும், நாங்கள் தினகரனைத்தான் விரும்பவில்லை சின்னம்மா சசிகலாவை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்றும் கூறுகிறார்கள்.
சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும், நிதியமைச்சர் ஆக்கப்பட்ட ஜெயக்குமாரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொடுத்த அழுத்தங்களுக்கு பணிந்தே அவரை அதிமுகவில் இருந்து நீக்கும் முடிவை எடுத்திருப்பதாக அதிமுகவினரில் சிலரே கூறுகிறார்கள்.
சசிகலாவை அதிமுகவில் இருந்து விலக்கி வைப்பது அனைவருடைய விருப்பம்தான் என்றால் இந்த விருப்பம் அதிமுகவினருக்கு எப்போது ஏற்பட்டிருக்கும் என்கிற கேள்விக்கும் பதிலை அவர்தான் சொல்ல வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

வலியச் சென்று வம்பில் சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்

மூன்றாம் பிறை க்ளைமாக்ஸ்தான் கமலுக்கு: அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்! # video

’ஜெ’ பாணியில் திமுகவுக்கு பதில் சொன்ன ஜெயக்குமார்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*