வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி விடுமுறை ஏன் தெரியுமா?

6 கோடி வாக்குகள்:30 நாளில் முதல்வர்-கமலின் திட்டம் இதுதான்…!

ஏன் மாற்றப்பட்டார் வித்யாசாகர் ராவ்?

வேலை வாய்ப்பு : லண்டனின் பியர் டேஸ்ட் பண்ண ஆள் தேவை !

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

தவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

“நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள், கிராமப்புற ஏழைகளுக்கு சேவை செய்யும் எங்கள் நோக்கங்களுக்கு பயன்பட மாட்டார்கள் என்று நீட் மூலம் மருத்துவக் கல்விக்கு மாணவர்களை எடுப்பதை நிறுத்திக் கொண்ட வேலூர் சி.எம்.சி மருத்துவமனை கேரளாவைச் சேர்ந்த சித்தார்த் நாயர் என்ற மாணவருக்கு மட்டும் சீட் கொடுத்தது. அவர் பணியில் இருக்கும் போது இறந்த இராணுவ வீரரான ராஜேஷ் நாயரின் மகன். இராணுவ கோட்டாவில் அந்த மாணவனுக்கு மட்டும் சி.எம்.சி இடம் கொடுத்தது.
சுமார் பத்து ஆசிரியர்கள், ஏகப்பட்ட பயிற்களுடன் கூடிய மருத்துவக் கல்வியை இந்த வாரம் சித்தார்த் துவங்கி இருக்கவேண்டும், ஒரே ஒரு மாணவன் மட்டுமே இந்த ஆண்டு மருத்துவம் படிக்க போகிறார் என்பதாலும் வேலூர் சி.எம்.சி வரலாற்றில் இதுவரை இல்லாத அதிசயம் என்பதாலும் பேராசியர்களுக்கும் சீனியர் மாணவர்களுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் இந்த வாரம் துவங்க வேண்டிய வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை ஏன் தெரியுமா? சித்தார்த் நாயர் துரதிருஷ்டமாக வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒரே ஒரு மாணவன் என்பதால் பத்து ஆசியர்களும் கொஞ்சம் ரிலக்ஸ்டாக இருந்து கொள்ளலாம்.
தமிழக மருத்துவ வரலாற்றில் வேலூர் சிஎம்சி ஆற்றிய பணிகள் அளப்பரியது. அப்படி ஒரு வரலாற்றைக் கொண்ட வேலூர் சிம்.எம்.சியின் மொத்த கல்லூரியும் ஒரே ஒரு மாணவனுக்காக பூங்கொத்தோடு காத்திருக்கிறது வெல்கம் சித்தார்த்…!

தொடர்புடைய பதிவுகள்

 

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

 

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

 

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*