வேலை வாய்ப்பு : லண்டனின் பியர் டேஸ்ட் பண்ண ஆள் தேவை !

 ‘ஜெ’வை மறப்போம் அனிதாவை நினைப்போம்…!

உங்களுக்கு பியரை சுவைத்து அதை விமர்சிக்க தெரியுமென்றால் – வாழ்த்துகள்! உங்களுக்கென ஒரு வேலையை வைத்துக் கொண்டு உங்களை வலை போட்டு தேடிக் கொண்டிருக்கிறது லண்டனில் இருக்கும் பியர் நிறுவனம்.
லண்டனை சேர்ந்த மீண் டைம் ப்ரூவிங் கம்பனி ( Meantime Brewing Company) லின்க்டு இன் தளத்தில் பதிவு செய்திருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி – பியர் டேஸ்டர் வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது. ஒரு நாளில் மூன்று மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும் – அப்புறம், திகட்ட திகட்ட பியர் குடிக்க வேண்டியிருக்கும் !

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் லிங்க்டு இன் தளத்தில் உங்களை பற்றி முப்பது வார்த்தையில் குறிப்பொன்று எழுதி #pickmeantime  என்ற ஹேஷ்டேகோடு அதை பதிய வேண்டும். மறுபடியும், வாழ்த்துகள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*