காந்தி ஜெயந்தி: வாய்ப்பூட்டு சட்டம் போடும் அரசாங்கம்

ஜெயலலிதா சமாதிக்கு செல்ல விரும்பும் சசிகலா…!

தேசப் பிதா என்றழைக்கப்படும் காந்தியின் பிறந்தநாளான இன்று மதுக்கடை மற்றும் கறிக்கடை ஆகியவற்றை அடைக்க வேண்டும் என்பது அரசாங்க உத்தரவு. இது நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாகிவிட்டது, மதுக்கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் அதற்கு ஒருநாள் விடுமுறை அளிப்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. எனினும் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மதுபானம் ப்ளாக்கில் விற்கப்படுகிறது. அதை காவல்துறையினரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் கறிக்கடை தொழிலை நம்பி இருப்பவர்களின் ஒருநாள் வருமானம் இதனால் பாதிக்கப்படும். கறிக்கடை முதலாளிகளை கணக்கில் எடுக்காவிட்டாலும், தினக்கூலிக்கு கறி வெட்டும் நபர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாது அசைவ ப்ரியர்கள் இதற்காக ஒருநாள் முன்பே வாங்கி வைத்து உண்ண வேண்டிய சூழலும் உள்ளது.

காந்தி ஜெயந்தி அன்று ப்ளாக்கில் மதுபானம் விற்பவர்களை காட்டிலும், கறி விற்பவர்களையே அரசாங்க அதிகாரிகள் அதிகமாக கண்டுபிடிக்கின்றனர். இன்று காந்தி ஜெயந்தி தடையை மீறி புதுக்கோட்டை தெற்கு 4-ஆம் வீதி உள்ள கோழி கடையில் கறி விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்த நகராட்சி சுகாதார அதிகாரி யாழினி பரக்கத் தேவி, சோதனை நடத்தி 25 கிலோ கறியை பறிமுதல் செய்துள்ளனர். பாஜக மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது போல ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஒருநாள் இதுவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று அசைவம் உண்ண விரும்புபவர்கள், பழைய கறியைதான் உண்ண வேண்டுமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*